நாம இருக்கிற அவசரத்துல நமக்கு உடனே உடனே எல்லாம் கிடைச்சாத்தான் அடுத்த அடுத்த வேலையை பர்ர்த்துட்டு போக முடியும். இருந்தாலும் சில விசயங்களுக்கு பொறுமையா இருக்கணும் அப்படிங்கிற ஒரு விதி இருக்கத்தான் செய்து. அப்படி நாம பொறுமையா இல்லைன்னா நமக்குத்தான் நஷ்டம்.
அதுவும் இந்த வலைபூக்கள் இருக்கிறதே அது சில நேரங்களில் வலி தரும் பூக்கள் போல ஆகிவிடுகிறது. அது இது அப்படி இப்படினு நம்ம வலைப்பூக்கள்ல இணைச்சி வைச்சிட்டா வலைப்பூக்களோட வேகம் குறைஞ்சி போயிறது பல நாளா நடக்கிற கொடுமை.
எனக்கு சில நேரங்களில பொறுமை இருக்கும், வலைப்பூ திறக்கிற வரைக்கும் இருந்து படிச்சிட்டு போயிறது. சில நேரங்களில அந்த மாதிரி சமயத்தில எதுக்கு படிக்கணும்னு அடுத்த வலைப்பூ பக்கம் திரும்பிரது. இதெல்லாம் எதுக்கு பிரச்சினை அப்படின்னு ரீடர்ல படிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க. ரீடர்ல படிக்கிறது எப்படின்னா வீட்டுல உட்கார்ந்து திரைப்படம் பார்க்கிற மாதிரி. ;)
இப்படித்தான் இந்த வலைப்பூ கூட பிரச்சினையில பல நாளா இருந்துட்டு வந்தது. என்னவெல்லாம் பண்ணி பார்த்துட்டேன். ஒன்னும் புரியல. சில நேரங்களில் தமிழ்மண சேவைக்கு காத்து இருக்கிறேன் என வரும். நானும் காத்து இருக்கிறேன்னு இருந்தேன். அப்புறம் அமித் ஜெயினுக்காக காத்து இருக்கிறேன் என வர ஆரம்பிச்சது. அப்போ நான் திருமண பந்தம் அப்படிங்கிற கவிதைக்கு ஒரு படம் இணைச்சிருந்தேன். அப்பத்தான் இந்த அமித் ஜெயின் என்னோட வலைப்பூ தனில் நான் படிக்க கடவு சொல் எல்லாம் கேட்டு வைச்சது. அதற்கப்புறம் படத்தை எடுத்துட்டேன், அது மாதிரி எதுவும் வரலை. ஆனா வலைப்பூ வேகம் குறைய ஆரம்பிச்சது. சரி அப்படின்னு எல்லா உபரிகள் வெளியேற்றினேன். அப்புறம் வேகம் ஆமை வேகம் தான். நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சினைன்னு நினைச்சேன். ஆனா சகோதரி சித்ரா சொன்னதும்தான் இந்த பிரச்சினையோட தன்மை புரிய வந்தது. நன்றி சித்ரா.
சரி இந்த அமித் ஜெயின் யாருன்னு தேடித் பார்த்தா ஒரு இணைய தளத்துல நான் அமித் ஜெயின் அப்படின்னு ஒரு சின்ன விளம்பரம். என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கறப்ப டெம்ப்ளேட் உள்ளார பார்த்தா இந்த அமித் ஜெயின் கோடிங் இருந்தது. அதை நீக்கினேன். இப்ப வேகமா வேலை செய்கிறது.
இது என்னன்னா நாம எத்தனை பேர் நம்ம பதிவை பார்த்தார்கள்னு பார்க்க ஒரு கோடிங் அது. எத்தனை பேர் பார்க்கிராங்கனு தகவல் பெற போய் பார்க்க வரவங்களுக்கு ஒரு எரிச்சல் தரக்கூடிய கோடிங் நமக்கு தேவைதானா? அது போல வேகமாக இயங்க மறுக்கும் வலைப்பூக்கள் எல்லாத்தையும் ஒரு நிமிஷம் சரி பார்த்துருங்க, படிக்க வரவங்களுக்கு சௌகரியமாக இருக்கும். வேற கோடிங் கிடைத்தால் அதை இணைத்துவிட்டு சரி பார்த்து கொள்ளலாம். நன்றி.
19 comments:
நன்றி..........
அட, எத்துனை வேகம், நன்றி மணிஜீ ஐயா.
உண்மைதான். உங்க வலைப்பூ எளிமையா இருக்கு. ஆனால் ரெம்ப நேரம் ஆகும். ஓபன் ஆக. இப்ப உடனடியா வருது.
நன்றி ஐயா.
நல்ல தகவலுங்க... நன்றி....
சரியாச் சொன்னீங்க. ஒரு இடுகை போட்டு தமிழ்மணம் தமிழிஷ்ல சேர்த்துட்டு பார்த்தா 5னு காட்டும்.
இதே தவறை நானும் செய்து, மீண்டு வந்தேன். :)
இன்னும் நிறைய நண்பர்கள் அந்த கவுன்ட்டரைப் பயன் படுத்துகிறார்கள். சிலருக்கு வலைப்பக்கமே காணாமல் போயிற்று.
:)
மிகப் பயனுள்ள தகவல் பகிர்வு!
நன்றி ராதா.
நன்றி பாலாசி,
நன்றி வானம்பாடிகள் ஐயா,
நன்றி ஷங்கர், அடக்கடவுளே.
நன்றி பரோட்டா
நன்றி சென்ஷி
நன்றி பா.ரா
இதே தவறை நானும் செய்து, மீண்டு வந்தேன். :)
பலருக்கும் பயன்படும் வண்ணமாக, நல்லா எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
சரிதான்.எத்தனை பேர் படிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்க அமித் ஜெயின் கோடிங் போட்டால் வலை சிக்கலாகி விடுகிறது.இப்படித்தான் ஒரு நண்பருக்கு சிக்கல் ஏதோ என்னால் முடிந்த உதவி செய்தேன்.
அடுத்து நண்பர் பிலாக்கர் மஸ்தான் கோடிங்.ஓரளவு நல்லா வேலை செய்தது.இப்போ சரியாக வொர்க் செய்யலை.
பொதுவாக மூன்றாவது நபரின் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தினால் தொல்லைதான்.
நமக்கும் பிலாக்கருக்கும் நடுவில் யாரும் வரக்கூடாது:)))))))
plz tell me which is the best coding?
நண்பரே,
உங்கள் இடுகையைப் பார்த்தப்பின்தான் இப்படி ஒரு இடுகை போட யோசனை வந்தது.
நன்றிகள்.
மிகவும் உபயோகமான பதிவு,எனக்கும் இதே பிரச்சனை இருந்தது.
நன்றி ராதா.
மிக உபயோகமான டிப்ஸ். நன்றி.
மிகவும் நன்றி ஆசிரியை.
மிகவும் நன்றி சித்ரா.
மிகவும் நன்றி கண்மணி, சரியாக சொன்னீங்க.
மிகவும் நன்றி கௌசல்யா, இதுவரை தெரியவில்லை, தெரிந்தால் சொல்கிறேன்.
மிகவும் நன்றி நண்பரே. உங்கள் இடுகையையும் படித்தேன்.
மிகவும் நன்றி வாசு சார்.
மிகவும் நன்றி ஸ்ரீராம்.
Post a Comment