Thursday, 15 April 2010
தண்ணீர் கண்ட பின்பு மரம் ஆனேன் - தொடர் பதிவு.
அடுத்த கட்ட அழையா தொடர் பதிவு. தண்ணீரும் மரம் வளர்ப்பதின் பயன்பாடும்.
இந்த பூமியில் மட்டும் எப்படி இவ்வளவு தண்ணீர் வந்ததுனு புது புது கதையா அறிவியலுல படிச்சேன். அட எதுக்கு மத்த கிரகத்தில எல்லாம் இந்த மாதிரி தண்ணி இல்லைன்னு நினைச்சப்போ ஒன்னும் புரியல. வியாழன் கிரகத்தில மீத்தேன் வாயு நீர் மாதிரி ஓடி திரியுதாம். கொமேட்டு கூட பனியாத்தான் இருக்குதாம். செவ்வாயில கூட பனி உறைஞ்சி இருக்காம்.
இப்படி மொத மொதல எல்லாம் கிரகங்களும் சூரியனிலிருந்து வெடிச்சி சிதறி வந்தப்ப எரிமலை குழம்பாக இருந்த இந்த பூமியில எப்போ பார்த்தாலும் அம்மோனியா, மீத்தேன் வாயு தான் இருந்துச்சாம், அதோட நிறைய கரியமில வாயுவும் கூட, கொஞ்சம் நீராவியும் இருந்துச்சாம் . அப்புறம் பூமி குளிர்ந்தப்ப மெதுவா நீராவி எல்லாம் தண்ணியா மாறி பூமியில கொட்டிச்சாம். அப்போதான் முதல் தண்ணீர் இந்த பூமியில உருவானதாம். அதோட மட்டுமில்லாம இந்த கொமேட்டு வந்து மொத்தமா பூமியில தண்ணிய கொட்டிட்டு போச்சுன்னு சொல்றாங்க.
அப்போ முத முத உருவான தண்ணி நல்ல தண்ணியா, உப்பு தண்ணியா அப்படின்னு யாருக்குத் தெரியும். இப்படி இருக்கறச்சே கடலு எல்லாம் உருவாகி இருக்கு. கடலு உருவாகி இருக்குன்னு சொன்னதும் தான் உப்பு தண்ணிதான் முதல வந்துருக்கணும் அப்படின்னு நினைக்க தோணுது. அந்த உப்பு தண்ணியில இருந்துதான் உயிரினங்கள் தோன்றி இருக்கும்னு ஒரு கதை படிச்சேன்.
மெல்ல தாவரங்கள் வர ஆரம்பிச்சதாம். அந்த தாவரங்கள் இந்த தண்ணியையும், கரியமில வாயுவையும் சேர்த்து வைச்சி உணவு தயாரிக்க ஆரம்பிச்சதாம். அப்படி இருந்த சமயத்தில்தான் கரியமில வாயு எல்லாம் குறைய ஆரம்பிச்சி, ஆக்சிஜன் அதிக அளவில உண்டாச்சாம். அப்புறம் தான் மத்த உயிரினங்களும் தோன்ற ஆரம்பிச்சதாம். அதோட வான் படலம் ஒன்னு உருவாச்சாம். இப்படி உருவான தண்ணி, மலைகள் இருக்கிற மூலிகைகள் மேல உரசி ரொம்ப நல்ல தண்ணியா இருந்துட்டு வருதாம். தாவரங்கள் தான் நல்ல தண்ணீர் வர காரணம்.
எல்லா ஒரே நிலபரப்பா இருந்த பூமிய இந்த தண்ணி தான் வந்து பிரிச்சி போட்டுச்சுனு சொல்வாங்க. எங்க பார்த்தாலும் கடலு. ஆனாலும் கடலு உப்பாத்தான் கிடக்கு, அதுக்கு முக்கிய காரணம் சோடியம்னு சொல்றாங்க. நம்ம கிணத்துல குளத்துல இருக்கற தண்ணியில கால்சியம், மெக்னீசியம் எல்லாம் அதிகம் இருந்தா அந்த தண்ணி உப்பு தண்ணி. அது இல்லாம இருந்தா நல்ல தண்ணி.
ஊருல நல்ல தண்ணி கிணறு, உப்பு தண்ணி கிணறுனு இருக்கும். ஊருல தண்ணித் தொட்டி எல்லாம் அப்போ கட்டாமதான் இருந்தாங்க. அதனால எங்கனயாவது போய் நல்ல தண்ணி எடுத்துட்டு வருவாங்க. அப்புறம் ஊருல குழாய் எல்லாம் போட்டாங்க. ஆனா தினமும் தண்ணி விடமாட்டாங்க. காசு வைச்சிருக்கவங்க அவங்க அவங்க வீட்டுக்கு தனியா குழாய் இணைப்பு வாங்கி வைச்சிட்டாங்க. இந்த தண்ணிக்காகவே குழாயடி சண்டை எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும். தண்ணீர்தனை அதிகமா அனாவசியமா செலவழிக்கக் கூடாதுனு எல்லாருக்கும் தெரியணும். .
அப்புறம் ஊருக்கு பொதுவா போர்வெல் எல்லாம் போட்டு வைச்சிட்டாங்க. அது என்னமோ நல்ல தண்ணியா அமைஞ்சிருச்சி. போர்வெல் போட்டு போட்டு இப்போ எல்லாம் உப்பு தண்ணியா மாறிட்டு வருதாம். இப்படி தண்ணி ஒரு பக்கம் இருக்கறப்ப மரமும் எங்க பார்த்தாலும் ஊருல இருந்துச்சி. நான் படிச்ச பள்ளி கூடத்தில மரக் கன்று எல்லாம் நட்டு வைப்போம். ஊரு ரோட்டோரமா புளிய மரம் எல்லாம் இருந்தது.
மரங்களே இல்லாதப்ப வந்த தண்ணி, மரங்கள் வந்ததும் மழையா பொழிய ஆரம்பிச்சி இருந்துச்சு. மரங்கள் குளிரிச்சியை தருதுன்னு சொன்னாங்க. மலைகள் இருக்குற பக்கம் எல்லாம் நல்ல மழை விழுமாம்ல. எங்க பக்கத்து ஊருல தொடங்கி மெதுவா மரங்களை வெட்ட ஆரம்பிச்சாங்க. மழை பெய்யாம போயிருச்சி. அப்போ அப்போ மழை கஞ்சி எல்லாம் எடுத்துருக்கோம். யாருமே மரத்தை நடுங்கனு சொன்னதில்லை. வேப்ப மரம் மாரியாத்தாவுக்கு சொத்துன்னு சொல்லி வைச்ச ரகசியம் புரியலை.
மரத்தை வெட்ட வேணாம்னு சொன்னா யாரு கேட்கறா. தானா வளருற மரத்தை மனிசருங்க பண்ணுன காரணத்தால ஒவ்வொருத்தரும் நட்டு வைச்சி வளர்க்க வேண்டியதா போச்சு. அசோக மன்னர் சாலை இருபுறங்களிலும் மரத்தை நட்டு வைக்க சொன்னார். இப்போ ஊருக்கு போயிருந்தப்ப ரோட்டோரம் மரத்தை எல்லாம் காணோம். சாலை விரிவாக்கம் செய்றாங்களாம். மரத்தை நட்டு வைச்சிருவாங்க தானே. அப்படி மரம் இல்லாம பாக்கறப்போ வெறிச்சினு எதையோ பறி கொடுத்ததை போல இருந்துச்சி.
மரம் வளர்ப்போம், மழை பெற வைப்போம். மரம் வளர்ப்போம் மனிதம் வளர்ப்போம். நிலத்தடி நீரை உறிஞ்சாமல் மழை நீரை சேமித்து மேலும் மேலும் மரம் வளர்ப்போம். உலக வெப்பமயமாதல் பத்தி எல்லாரும் கவலை படறாங்க. கவலைபட்டா போதாது, ஒரு செடி என்ன ஓராயிரம் செடி வளர்க்கணும். பயோடீசல் உருவாக்கணும். இந்த தாவரங்கள் நமக்கு மருந்து. நீர் தரும் ஆதாரம்.
எப்பவோ எழுதின கவிதையில கடைசி வரி எனக்கு எப்பவுமே பிடிச்சது. 'எதிர்கால இருளுக்கு நிகழ்கால வெளிச்சம் விதையுங்கள்' தாவரங்கள் இல்லைன்னா எந்த உயிரினமும் இல்லை. எனவே தாவரங்கள் பாதுகாப்போம். நீர் சேமிப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...
5 comments:
அவசியமான நல்ல பதிவு,
நன்றி.
அருமையா எழுதி இருக்கீங்க.
(ஏனோ உங்கள் ப்லாக் பேஜ் load ஆக அதிக நேரம் எடுக்கிறது.)
மிக்க நன்றி பரோட்டா, சித்ரா. உண்மைதான், www.amitjain.co.in எனும் இணையதளம் இதில் எங்கோ இணைந்து இருக்கிறது. அதற்காகவே நிறைய நேரம் எடுக்கிறது. இதனை எப்படி சரி செய்வது என தெரியவில்லை. சில நேரங்களில் தமிழ்மணம் என காட்டுகிறது. தமிழ்மணம் எடுத்துவிட்டால் தமிழிஸ் காட்டுகிறது. ஒரு பதிவாக போட்டு உதவி கேட்டுவிடலாம் என இருக்கிறேன்.
நன்றி சித்ரா, இப்பொழுது சரி செய்து விட்டேன், அந்த டெம்ப்ளேட்டில் அமர்ந்திருந்த அமிட்ஜெயின் தனை தேடி கண்டுபிடித்து நீக்கிவிட்டேன். :)
மரம்+தண்ணீர் டூ இன் ஒன் பதிவு நல்லாயிருக்கு.
Post a Comment