அப்பொழுது இரு மலைகள் இருபுறமும் சூழ்ந்திருக்க நடுவில் சென்ற பாதையில் பயணித்தோம். இறக்கமாக பாதை இருந்தது. பயமாகப் போய்விட்டது. சற்று கவனம் சிதறினாலும் பயணம் தடைபட்டுவிடும் என்கிற நிலை. செல்லும் வழியில் இருக்கும் குகை பற்றி அறியாததால் அதைக் கடந்து வேறு இடத்திற்கு வந்தோம்.
பாதையெல்லாம் பனியாய் நிறைந்திருக்க காரினை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். பனி லேசாக கொட்ட ஆரம்பித்தது. பாதையில் நடந்து சென்று மலை மீது ஏறி பின்னர் குகை செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம்.
சிறிது நேரம் மேலே ஏறியதும் மனம் அதற்கு மேல் செல்ல மறுத்தது. பனி சற்று வழுக்கவும் செய்தது. சரியான கருவிகள் துணை இன்றி செல்வது தவறு என குகையைப் பார்க்கமால் திரும்பினோம். பின்னர் அங்கிருந்து ஸ்டேட்ஸ்வொர்த் எனும் இடத்திற்குச் சென்றோம்.
(தொடரும்)
5 comments:
Nice photos and post.
அடடா.. நல்ல வெய்யல் நேரத்துல பனிப்பாதைய பத்தியெல்லாம் சொல்லி குளிரூட்டுறீங்களே....
மிக்க நன்றி சித்ரா, பாலாசி.
பகிர்வுக்கு நன்றி
மிக்க நன்றி நண்பரே.
Post a Comment