Monday, 8 March 2010

நேனோவுக்கா நோ நோ



உலகம் சின்னதாகப் போனதுனு
தொழில்நுட்பம் காட்டி வருகுது
ஊரெல்லாம் சுத்தி வர
ஒரு இலட்சம் பணத்துக்கு
நேனோ காரு வலம் வருது

குண்டும் குழியுமா இருக்கற சாலையில
நண்டு போல தாவி வந்தா
நோனோவுக்கு குடைச்சல் தான்
தானா வந்து சேருமே

சாலையை பழுது பார்க்க
யாருக்குத்தான் மனசிருக்கு
சாதாரண கிராம சாலைக்கு
கட்ட வண்டிதான் லாயக்கு

ஒடுக்கமான காருக்குள்ள எட்டு பிள்ளைகளோட
ஒடுங்கிப் போகாதீங்க இது அம்பாஸிடர் இல்லீங்க
இது வண்ண குடையுமில்லை - ஆனா
மழை வந்தா இனி பயமில்லை

ஸ்கூட்டருக்கும் மீட்டருக்கும் 
இனி கவலை வேணாம்
கும்மாளம் போட்டுக்கிட்டு 
குதூகலமா நேனோவுல போலாம்

நேனோவுல உட்கார முடியாத
உடலளவு இருந்தா 
பெருமூச்சு விட்டுராதீங்க
சும்மா பறந்து போகும் பாருங்க!

5 comments:

Chitra said...

ஒடுக்கமான காருக்குள்ள எட்டு பிள்ளைகளோட
ஒடுங்கிப் போகாதீங்க இது அம்பாஸிடர் இல்லீங்க
இது வண்ண குடையுமில்லை - ஆனா
மழை வந்தா இனி பயமில்லை

........ :-) very funny!

புலவன் புலிகேசி said...

இந்த நேநோ ஆட்டோவை ஆல்டர் செஞ்ச மாதிரி இருக்கு...

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு:)!

vidivelli said...

சாலையை பழுது பார்க்க
யாருக்குத்தான் மனசிருக்கு
சாதாரண கிராம சாலைக்கு
கட்ட வண்டிதான் லாயக்கு

நல்லாயிருக்கு
நம்ம பக்கம் வாறதாய் தெரியேல்ல!!!!!!!
புதிய அபிமானி........

Radhakrishnan said...

நேனோவை அழகாய் ரசித்த சித்ரா, புலிகேசி, ராமலக்ஷ்மி மற்றும் விடிவெள்ளிக்கு நன்றி.