இசையில ஆர்வம இருக்குற ஒரு பையனை நான் பார்த்தேன், அவனை இசை அமைப்பாளர் ஒருத்தர் அவர் இசை அமைக்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத சொல்லி கேட்டு இருந்துருக்காரு, அவனும் எழுதி தரேன்னு சொல்லி இருந்துருக்கான்.
அவன் இவன் அப்படின்னு வர ஒரு பாட்டை என்கிட்டே போட்டு காமிச்சான். இது போல எழுதனும்னு சொன்னான். நா கவிதை எழுதுவேன் பாட்டு என்னடா பாட்டு, சந்தம் கொடுடானு சொன்னேன். அவன் சந்தா கொடுக்க சொல்றான்னு நினைச்சிருப்பான் போல. இல்ல வரிய வெட்டி வெட்டி பதினாலு வரி வேணும். அதை நான் அனுப்பி சரியானு கேட்கணும்னு சொல்லிட்டான்.
சரிடா எழுதி தரேன் அப்படின்னு பதினாலு வரி எழுதி கொடுத்தேன். அதுல ஒரு நாலு வரி எழுதினதை பார்த்துட்டு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். உன் அறிவியல் புத்தி உன்னை விட்டு போகாதானு கேட்காத குறைதான். நானே எழுதி அனுப்பி வைக்கிறேன்னு போய்ட்டான். ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேனு வருத்தமா இருக்கு. மத்த வரிகளை எல்லாம் பாத்து இசை அமைப்பாளர் என்ன சொல்வாரோன்னு ஒரு பயம் வேற.
அவன் சிரிச்ச வரிகளை மட்டும் எழுதுறேன்.
ஆஸ்டிராய்டுகளை எரிப்பான்
கோமெட்டுகளை உடைப்பான்
சூரியனை எரிப்பான்
நெருப்பின் தலைவன் அவன்
பூமியை பிளந்து
மேக்மாவை மேனியில் பூசியவன்
ரௌத்ரம் ரௌத்ரம்
சொல்லும் இவன் சரித்திரம் சரித்திரம்
முத நாலு வரிதான் அவனை அப்படி சிரிக்க வைச்சது. தமிழ் படத்துக்கு பாட்டு எழுத இலக்கியம் மட்டுமே படிக்கனுமா என்ன.
ஒரு காதல் பாட்டும் கேட்டான், போடா முதல இதுக்கு ஓ கே வாங்கிட்டு வானு அனுப்பிட்டேன். நானும் பாடலாசிரியர் ஆகிருவேனு கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அரைகுற ஆராய்ச்சியாளர், வெறும் எழுத்தாளர், இப்போ பாடலாசிரியர்... ம்ம்ம்.
3 comments:
அறியா புள்ள, புரியாம சிரிச்சி புட்டான். நீங்க எழுதுங்க. படிக்க, நாங்க இருக்கோம். :-)
துடிப்பான ஆளுதான்
எழுதனதெல்லாம் ஜோருதான்
மெட்டுக்கு பாட்டெடுப்பாரு
ஹிட்டுக்கே பெட் வைப்பாரு...
இன்னும் அவன் எனக்கு பதில் சொல்லலை. பொறுமையா இருக்கிறேன்.
Post a Comment