என் கைகள் வெறுமையாய் இருக்கிறது
அழகுப்பார்த்துக் கொள்ள
அனுமதியில்லாமல் அழுது நிற்கிறது
அழகுப்பார்த்துக் கொள்ள
அனுமதியில்லாமல் அழுது நிற்கிறது
அழகிய அணிவகுப்பாய்
பெண்ணுக்கென மட்டும்
உன்னை ஒதுக்கிக் கொண்டது ஏனோ?
சின்னஞ்சிறு வயதில் எனக்கு
உடைத்து விளையாட
உருவான வளையல்.
அன்புக்கட்டிலில் நொறுங்கும் வளையல்
காப்பு கட்டி தொட்டிலுக்கு
வருகை சொல்லும் துள்ளல் வளையல்
குட்டிப்பெண்ணும் குதூகலித்து
கொண்டாடும் வளையல்
கொலுசைப் போல் மறைந்து
காதல் சொல்லாது
நேராய் நிமிர்ந்து காதல் சொல்லும்
தைரிய வளையல்
கற்கள் கொண்டு
கண்ணைப் பறிக்கும் வளையல்
வானவில்லில்லா நிறங்களும் கொண்டு
வர்ணம் ஜொலிக்கும் வளையல்
மனதில் இடம்பிடித்ததன்றி
தமிழ்த்திரைப்பாடலில் தனியிடம் பிடித்த
முத்து முத்தான வளையலுங்க.
4 comments:
மனதில் இடம்பிடித்ததன்றி
தமிழ்த்திரைப்பாடலில் தனியிடம் பிடித்த
முத்து முத்தான வளையலுங்க.
........வளை ஓசை கல கல ..... கல கலக்குது உங்கள் மனதில் - கவிதையில்
அழகிய அணிவகுப்பாய்
பெண்ணுக்கென மட்டும்
உன்னை ஒதுக்கிக் கொண்டது ஏனோ?
உங்களது ஆசை வினோதமானது.
வளையல் வளையல்.. மங்கையர் விரும்பும் அணிகலன்.
கவிதை மிக அருமை ராதாக்கிருஷ்ணன் சார்.
நல்லா சொல்லி இருக்கீங்க,,, கலைடாக்ஸ்கேப்பில் வித விதமாய் டிசைன் காட்டும் அழகான வளையல் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி.
Post a Comment