Friday, 5 March 2010

அந்த மான் சிறை




அழகான அந்தமானில் 
சொந்த உரிமைக்கென குரலிட்டவர்களை
குரல்வளையை நெறித்து
சுதந்திர காற்றைக் கூட 
சிறைப்படுத்தி அனுப்பிய இடமோ?

அந்த மானைத் தேடிச்சென்ற
ராமன் பட்ட அவஸ்தை
சொந்த மண்ணை வேண்டியவரை
வெந்து போக வைத்திட
கட்டப்பட்ட கல்லறை இதுவோ?

சுதந்திர வேட்கை தணித்திட
இப்படியும் ஒரு சுடுகாடோ?
மனிதம்தனை கொளுத்திட 
இப்படியும் ஒரு கல்வெட்டோ?

சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் நாங்கள்
இக்கட்டிடத்துக்கும் சுதந்திரம் கொஞ்சம் தாருங்கள்
உடலெல்லாம் வலியைச் சுமந்திடும் 
உடனடியாய் விடுதலை தாருங்கள்
மனிதர்களை அடைத்திடும் சிறை அல்லாது
மனிதம் உருவாக்கிடும் கருவறையாய் மாற்றுங்கள்.

6 comments:

தமிழ் உதயம் said...

இன்னும் உலகில் நிறைய அந்த மான்கள் உள்ளனவே.

மனிதர்கள் உள்ளவரை சிறைகளும் இருக்குமோ.

தனித்தன்மை வாயந்த கவிதை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இப்போது இது சிறையில்லை நண்ப!இன்று இது நமது நாட்டின் நினைவுச்சின்னம்.

மதுரை சரவணன் said...

மனிதம் உருவாக்கிடும் கருவறையாக..அருமை. வாழ்த்துக்கள்.

Chitra said...

மனிதர்களை அடைத்திடும் சிறை அல்லாது
மனிதம் உருவாக்கிடும் கருவறையாய் மாற்றுங்கள்.

.......... very nice! நடக்க வேண்டிய அருமையான யோசனை.

நீச்சல்காரன் said...

நல்ல ரசனையான வரிகள்

Radhakrishnan said...

அனைவருக்கும் எனது நன்றிகள்.