Thursday, 4 March 2010

வித்து காசு பாத்துறாதண்ணே




எம்புட்டு நேரம் நிற்கிறது 
சீக்கிரமா படமெடுண்ணே 
அம்மாக்கு ஒத்தாசையா 
செங்கல் தூக்கனும் 

அழுக்குத் துணி மாத்தி 
கலைஞ்ச முடியை 
வாரி பூச்சுடி 
அழகா போஸ் கொடுக்க 
வருச பொறப்புக்கு வாண்ணே 

இந்த படத்தை எங்கயும் 
வித்து காசு பாத்துறாதண்ணே 
பள்ளிக்கூட போற வயசில்ல 
பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் 

குழந்தைத் தொழிலாளினு சொல்லி 
பொழப்பை கெடுத்துராதண்ணே 
உழைச்சாத்தான் பசிக்கிற 
வயிறும் சந்தோசப்படும் 
இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே!

9 comments:

vasu balaji said...

சம்மட்டியடி!

sathishsangkavi.blogspot.com said...

//குழந்தைத் தொழிலாளினு சொல்லி
பொழப்பை கெடுத்துராதண்ணே
உழைச்சாத்தான் பசிக்கிற
வயிறும் சந்தோசப்படும்
இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே//

செம்மத்தாக்கு தாக்குறீங்க....

தமிழ் உதயம் said...

உழைச்சாத்தான் பசிக்கிற
வயிறும் சந்தோசப்படும்
இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே!

அதை தவிர வேறு எதுவுமே படத்தில் தெரியாதே.
அருமையான கவிதை.

Chitra said...

இந்த புகைப்படத்தையும் கவிதையும் பார்த்த பின், ஒரு guilty உணர்வு இல்லாமல் சாப்பிட முடியாது.

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

உஅழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற உணர்வே நல்ல சிந்தனை தான் - இருப்பினும் அது ஒரு குஅழந்தையிடம் இருந்து வரும் சிந்தனை என்னும் போது மனம் வலிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் - மாற்று வழி காண வேண்டும்,

Radhakrishnan said...

மிக்க நன்றி வானம்பாடிகள் ஐயா, சங்கவி, தமிழ் உதயம், சித்ரா, சீனா ஐயா. ஆமாம் மனம் வலிக்கத்தான் செய்யும், ஆனால் எந்த வலியையும் தாங்கிக் கொள்ளும் மனிதர்களாய் நாம்.

Paleo God said...

கொடுமை..:(

vidivelli said...

அருமையான கவிதை.


புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!!!

Radhakrishnan said...

மிகவும் கொடுமையான நிகழ்வுதான். மிக்க நன்றி ஷங்கர். மிக்க நன்றி விடிவெள்ளி, வருகை தந்திருந்தேன்.