Wednesday, 3 March 2010

இன்னும் மிச்சமிருக்கு சுனாமி



செத்துப் போவோம்னு தெரிஞ்சா
யாராச்சும் வாழ நினைப்பாங்களா
செத்துப் போனவகளைப் பார்த்தும்
சீவன் அழியாதுனு சொல்லி இருக்கு

அழிஞ்சிப் போனதை அறிஞ்சும்
அங்கனேயே வீடு கட்டி
தொலைஞ்சி போற சனம்
நாமில்லைனு சொல்லனும்
துன்பத்தை நாமதான
எட்டாத விலை சொன்னாலும்
விலைக்கு வாங்கனும்

அஸ்திவாரம் சரியில்லாம
விழுற வீடு போல இல்லாம
இந்த அலை வந்து
தொட்டு இழுத்தாலும்
போய்ச் சேராம
அசையாத கட்டிடம் தான்
நாம கட்டி வைக்கனும்
நம்ம பேரை இந்த கட்டிடத்தில
பொறிச்சி வைக்கனும்
என்ஜீனியரு யாருனு
எல்லாரும் கேட்கனும்

அழிச்சாலும் முளைச்சி வரும்
வீடு விதை இருக்கா
உழைக்காம வாழத்தான்
ஏதும் வழி இருக்கா
இன்னைக்கு சீரியலுல
என்ன நடக்குதுனு
பாக்கனும்
இப்படியே நின்னு
நினைப்பை மினுக்கிக்கிட்டா
வேலை அது பறி போயிரும்!

3 comments:

சுந்தரா said...

//அழிச்சாலும் முளைச்சி வரும்
வீடு விதை இருக்கா//

:)விஞ்ஞானிகள் மும்முரமா முயற்சி பண்ணிட்டிருக்காங்க. சீக்கிரம் விற்பனைக்கு வரலாம்.

கவிதைக்கேற்ற படம். அருமை ரங்கன்!

sathishsangkavi.blogspot.com said...

//அழிச்சாலும் முளைச்சி வரும்
வீடு விதை இருக்கா
உழைக்காம வாழத்தான்
ஏதும் வழி இருக்கா
இன்னைக்கு சீரியலுல //

அழகான ஆழமான வரிகள்...

Unknown said...

விதை சாரி கவிதை அருமை.வாழ்த்துகள்