ரஜினியைப் பற்றி எவரேனும் அவதூறு வார்த்தைகள் சொன்னால் ஏனோ மனதில் ஒரு இனம் புரியாத கோபம் வந்து போகிறது. ரஜினியின் அமைதியைப் பார்த்து நானும் கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது, ஒவ்வொரு மூலையிலும் எவரேனும் ஒருவர் ரஜினியைத் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். இதுகுறித்து ரஜினிக்குத் தெரியும்.
ஊரார் பேச்சுக்கெல்லாம் செவி கொடுத்துக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல, தனது செயல்களில், எண்ணங்களில் உறுதியாக இருப்பவன் எவனோ அவனே வாழ்க்கையின் சாதனையாளனாகிறான். ஒருவன் சாதனையாளனாவதற்கு வெகுவாக காரணமாக இருப்பவர்கள் மிக மிகச் சாதாரண மனிதர்களே என்பதை எந்தவொரு சாதாரண மனிதனும் புரிந்து கொண்டிருப்பதில்லை.
நூறு பேர் சேர்ந்தால் தான் ஒரு கூட்டம், அதில் ஒருவன் தனித்துத் தெரிவான் எனில் அவனே தலைவன் என்கிற நிலைதான் உண்டு. தனித்துத் தெரியப்படுபவனை தலையில் வைத்து ஆடுபவர்கள் மீதமிருக்கும் தொண்ணூற்றி ஒன்பது பேரும். இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த தனி ஒருவனால் பின் வரும் காலத்தில் பயமுறுத்தப்படுவார்கள். இதைப் போன்றே பயத்தினால் மட்டுமே பதுங்கி வாழும் வாழ்க்கையைப் பழகிப் போவோர்களே இந்த சாதாரண மனிதர்கள். மனதில் எழும் குமுறல்களை பேச்சுகளாலும், எழுத்துகளாலும் மட்டுமே இவர்களால் வெளிக்காட்ட முடியும். இவர்களால் எந்தவொரு ஆதாயமும் இல்லை, எந்தவொரு புரட்சியும் ஏற்பட போவதில்லை. மொத்தமாகக் கத்தும் கொள்ளைக்காரர்கள் இவர்கள், இவர்களில் நானும் ஒருவன்.
தனக்கென்று ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், கூட்டம் கூட்டமாக சேர்ந்து கும்மாளம் போடுபவர்கள், பொதுநல அக்கறை என கொஞ்சம் கூட இல்லாதவர்கள், இவர்களுக்கெல்லாம் கத்த மட்டுமேத் தெரியும், கற்றுக்கொள்ளத் தெரியாது. அப்படிப்பட்ட ஏக்கங்களுடன் வாழும் பல சாதாரண மனிதர்களிடமும் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.
ரஜினி ஒரு கட்சி ஆரம்பிக்கமாட்டாரா, அதனால் சகல மக்களும் நலம் பெற்று விடமாட்டார்களா என ரஜினி ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருப்பது போல பல சாதாரண மனிதர்களுக்கும் இருக்கிறது. தவறு ஆட்சியாளர்களிடம் இல்லை, மக்களிடமும் இருக்கிறது, அதாவது தவறை ஊக்குவிக்கும் இந்த சாதாரண மக்கள் ஆட்சியாளர்களைத் தவறச் செய்கிறார்கள். நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு எனும் ஒரு தொடர்கதையை ஆரம்பித்தபோது நண்பர் ஒருவர் நகைச்சுவையாகவே சொன்னார் 'அங்கே எல்லாம் ஆட்டோ இல்லையா' என.
சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கும் அடித்தட்டு பிரச்சினைகளைச் சரிசெய்யவும், தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை சரி செய்யவும் என அவர்களுக்கு நேரம் சரியாகிப் போகிறது, இந்த இளைஞர்கள் பற்றி என்ன எழுதுவது! பொறுப்பற்ற சமுதாயத்தின் பொறுப்பற்றவர்களில் இவர்கள் தான் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இளைஞர் சமுதாயம் என்னென்ன சாதித்திருக்கிறார்கள் என்று மட்டும் கொதித்து எழுந்து விடாதீர்கள். குப்பை குப்பையாகத்தான் இருக்கிறது, அதுவும் அதிகப்பட்ட குப்பையாய்.
ஒரு கதை எழுதுவதைக் கூட எத்தனை விசயங்களை நினைத்து கதாபாத்திரத்தை ஏற்படுத்தி வருகையில் ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்வது என்பது அத்தனை எளிய காரியமா? ரஜினியே கட்சி ஆரம்பித்து ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டால் சாதாரண மக்களின் துயரம் நீங்கிவிடுமா? மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஆனால் நாம் அவ்வாறு செயல்பட இயலாது, ஏனெனில் அன்றாடத் தேவைகள் நமக்கு எது சரியோ அதுவே போதும் என்றுதான் நிலையில் இருப்போம், நான் அப்படித்தான் இருந்தேன், இருக்கிறேன்.
ரஜினி ஆனந்த விகடனோ, குமுதமோ ஒன்றில் பல வருடங்கள் முன்னர் மிகவும் அழகாக பேட்டி கொடுத்திருந்தார், மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என. யார் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் அதில் நாமும் குளிர் காய வேண்டும் என்றுதானே பலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்துத் தொடங்கியதுதான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு. இந்த தொடர்கதையை எப்படியெல்லாம் கொண்டு போக வேண்டும் என மனதில் முழுத் திட்டமும் தீட்டி வைத்திருக்கிறேன். ஏனெனில் சிறு வயது முதல் நான் கண்ட கனவுகளில் ஒன்று அது.
ரஜினி கட்சி ஆரம்பிக்க நினைத்தால் இன்னும் நன்றாக யோசிக்கட்டும், பிரபலமானவர்கள், சாதனையாளர்கள் மட்டுமே கட்சி ஆரம்பித்தால் தான் நாடு சுபிட்சம் பெறுமா? இதோ எனது கிராமத்தில், எனது நகரில், எனது மாநிலத்தில், எனது நாட்டில் தனித்தே பொதுநல காரியங்கள் செய்து கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று கூடட்டும், ஒரு கட்சி ஆரம்பிக்கட்டும், நம்மில் மாற்றம் ஏற்படட்டும், நாடு சுபிட்சம் பெறும். அவர்களைக் கண்டு தயவுசெய்து பொருமிவிடாதீர்கள்.
ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5
7 comments:
ரைட்டு...:)
/////ஊரார் பேச்சுக்கெல்லாம் செவி கொடுத்துக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல, தனது செயல்களில், எண்ணங்களில் உறுதியாக இருப்பவன் எவனோ அவனே வாழ்க்கையின் சாதனையாளனாகிறான்./////
...... well-said!
உங்க அப்ரோச் நல்லா இருக்கு. எப்போ கட்சி ஆரம்பிக்க போறீங்க? பதிவுலக நண்பர் - வருங்கால முதல்வர் - வணக்கம்!
இந்த இடுகைக்காக, என் வோட்டு உங்களுக்கு.
மிக்க நன்றி ஷங்கர்,சித்ரா
ரஜினி கட்சி ஆரம்பித்தால் ஓட்டுக்கு துட்டு கொடுப்பாரா தல!?
அதுதானே! மக்களின் மனமாற்றம் ஒன்றுதான் நல்வழிக்கு வழிவகுக்கும். நான் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் ஓட்டுக்கு துட்டு கொடுக்க மாட்டேன். ;) என்னைப் போலவே ரஜினி இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பது என் தவறுதான்.
நானொரு முன்னாள் ரஜினி ரசிகர். எண்பதுகளில் வந்த ரஜினி படங்கள் எனக்கு ரெம்ப பிடிக்கும். அந்த ஹேர் ஸ்டைல், துள்ளல் எல்லாமே பிடிக்கும்.
மிக்க நன்றி தமிழ் உதயம்.
Post a Comment