Wednesday, 3 February 2010

தமிழ்மணத்துக்கு காமம் பிடிக்காது

பொதுவாக தமிழ்திரட்டிகளைப் பற்றி நான் எதுவுமே அதிகமாக எழுதுவதில்லை. ஆனால் என்னைப் போன்று அங்கீகாரம் பெற இயலாத பலரது எழுத்துகளை பலருக்கு அறிமுகப்படுத்தும் வகைதனில் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் திரட்டிகள் அனைத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு வலைப்பதிவாளாராக என்னை ஒருபோதும் நான் கருதிக் கொண்டதில்லை. இங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் பதிவுகள்/இடுகைகள் சில ஆண்டுகளாகவே முத்தமிழ்மன்றம் எனும் இணையதளத்தில் நான் எழுதியவை என்பதை முன்னரே இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

இருப்பினும் வலைப்பதிவாளர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் எழுதுவதன் மூலமும், சில தொடர்களை இங்கே ஆரம்பித்து எழுதியதன் மூலமும் நானும் வலைப்பதிவாளர்களில் ஒருவன் எனும் தோற்றத்தை எனக்குள் உருவாக்கிக் கொண்டது என்னவோ உண்மை.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் எனது இடுகைகள் பலரைச் சென்றடைய உறுதுணையாக இருப்பது திரட்டிகளே. திரட்டிகளின் துணையால் வருபவர்கள் அனைவருமே வாசிக்கிறார்களா என்பதை விட , வந்து செல்கிறார்கள் என்பதை கண்கூடாக காணலாம்.

தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி, தமிழ்10, சங்கமம், திரட்டி என இவற்றின் மூலம் நான் பெற்று வரும் பயன்கள் பல. எனது இடுகைகளுக்கான வாக்கு பதிவுகள் என்பது மிகவும் அரிய விசயமே. ஏனெனில் நான் அதிகமாக இதுவரை வாக்கு அளித்தது இல்லை. அதிகபட்சமாக தமிழிஷ் மூலம் 23 வாக்குகள் தாரவி என்கிற ஒரு இடுகை பெற்று இருக்கிறது. பிற இடுகைகள் தரம் வாய்ந்தவைகளா, இல்லையா என்பதை இந்த வாக்குகள் தீர்மானிக்கிறதோ இல்லையோஅந்த இடுகைகளின் தரமே அதற்கு அத்தாட்சி.

காமம் 1 எனும் இடுகையை தமிழ்வெளி சூடான இடுகை என காட்டிக்கொண்டிருந்தது. எனக்கு எப்படியோ போய்விட்டது. சூடான இடுகை எனும் அளவிற்கு அந்த இடுகையில் அப்படி ஏதுமில்லை. தலைப்புக்கே அந்த இடுகை சூடாகிப் போனது என்னவோ உண்மை. இப்படியிருக்க தமிழ்மணத்தில் அதிகபட்சமாக மூன்று வாக்குகள் மட்டுமே ஒரு இடுகை பெற்று இருக்கிறது, மேலும் சூடான இடுகைகள் எனும் பகுதியை ஒரு இடுகை கூட இதுவரையிலும் பெறவில்லை. இதற்கு காரணம் எந்த ஒரு இடுகையும் சூடாகவில்லை.

இப்படியிருக்கும் பட்சத்தில் நான் பதிவு செய்யும் எடிட்டர் எனப்படும் பகுதியை அப்டேட் (ஆங்கில வார்த்தைகளுக்கு வருந்துகிறேன்) செய்துவிட தமிழ்மண வாக்குப் பட்டையானது எப்படியோ சிதிலமடைந்துவிட்டது. முன்னர் பதிவுகளை இணைத்துவிட்டுப் பார்த்தால் வாக்கு அளிக்க ஏதுவாக இருக்கும், ஆனால் இப்போது அந்த வாய்ப்பில்லாது போய்விட்டது, இடுகையை என்னால் இணைக்க முடியும், ஆனால் யாராலும் வாக்கு அளிக்க இயலாது.

பல தடவை இணைத்துப் பார்த்தேன், ஒன்றும் நடக்கவில்லை. சரியென 2005 தமிழ்மண வாக்குப் பட்டையை இணைத்து முயற்சித்தேன், அதுவும் நடக்கவில்லை, அப்போதுதான் நண்பர் ஸ்டார்ஜன் முயற்சித்து எனது வலைப்பூ தடை செய்யப்பட்டதோ என ஐயம் கொண்டிருக்கிறார். எந்த தமிழ்திரட்டிகளும் தடை செய்யுமளவுக்கு எனது எழுத்துகளை அமைத்துக் கொள்ளமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

வாக்குப் பட்டை போய்விட்டது என்பதல்ல பிரச்சினை, ஒரு வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்பதில்தான் என் அக்கறை. விதூஸ் தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை என இதே பிரச்சினையை பலமுறை எழுப்பி இருக்கிறார், ஆனால் என்ன பலன் அடைந்தார் எனத் தெரியவில்லை. எனவே தமிழ்மண நிர்வாகிகளை உடனுக்குடன் தொடர்பு கொண்டு இதுபோன்ற பிரச்சினைகளை களைந்துவிட உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த பதிவு.

ஓ தலைப்பா? அந்த கர்மத்தை விட்டுத் தள்ளுங்கள். :) இப்பொழுது மீண்டும் வாக்குப்பட்டை இணைத்து இருக்கிறேன், சரியாக வருகிறதா எனப் பார்க்கிறேன், இல்லையெனில் நீங்கள் ஒரு நல்ல யோசனை சொல்லுங்கள். அனைவருக்கும் மிக்க நன்றி.

21 comments:

Thekkikattan|தெகா said...

வெ. இரா, என்ன தனியாக மண்டபத்தில் நின்று புலம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். காமம் என்ற் தலைப்பின் கீழ் நீங்கள் எழுதிய பதிவுகள் ஒன்றும் அப்படி ஆபாசமான முறையில் அமைந்திருக்கவில்லை அதனால் தமிழ்மணத்திலிருந்து விளக்கி வைத்திருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதோ கருவிப்பட்டை நிரலியில் பிரட்ச்சினை இருக்கக் கூடும். பாருங்கள்.

Thekkikattan|தெகா said...

உங்கள் எழுத்திற்கான அங்கீகாரம் வலை சார்ந்து, கடமையை செய்து கொண்டே இருங்கள், நல்ல பண்டங்களுக்கு எப்பொழுதுமே மவுசு இருந்து கொண்டே இருக்கும். நின்று விற்கும். அட நம்புங்க. :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கருவிப் பட்டை இருக்கிறது. நீங்கள் இன்னும் தமிழ்மணத்திற்கு அனுப்பவே இல்லையே.., பின்னர் எப்படி நாங்கள் வாக்களிப்பது..,

Vidhoosh said...

நடுவில் ஒரு முறை தமிழ் மணம் வோட்டுப் பட்டையை பதிவர் சஞ்சய் காந்தி நிறுவி கொடுத்தார், ஆனால் வோட்டு போட முடியாமலேயே இருந்தது. இப்போது மீண்டும் தமிழ் மணம் காணாமல் போய் விட்டது. என்ன மீண்டும் அடுத்த வருடம் தமிழ் மணம் போட்டியில் சேர முடியாது. "சரிதான் போடா" என்று விட்டு விட்டேன். :))
தமிழிஷ் மட்டும்தான் எப்போதும் ஒரே மாதிரி stable ஆக இருக்குங்க.

vasu balaji said...

சார். தமிழ்மண வாக்குப்பட்டை சில நேரம் இப்படி பணிசெய்யாமல் போகக்கூடும். காரணம் திரட்டியில் அல்ல. rss feed feedburner ஆக இருக்கும் பட்சத்தில் இது நிகழக்கூடும். எதுவாயினும், தமிழ்மணத்துக்கு எழுதுங்கள். உடனே சோதித்து ஆலோசனை சொல்லுகிறார்கள்.

Vidhoosh said...

///வானம்பாடிகள் said... உடனே சோதித்து ஆலோசனை சொல்லுகிறார்கள்.//
அலாதி நம்பிக்கை சார்.

நான் நிறையா தரம் எழுதிட்டேன். ஈமைலுக்கு பதில் கூட வருவதில்லை. பிப்ரவரி 09 -இல் முதலில் blogger வந்தேன். மார்ச்சில் திரட்டிகளில் இணைந்தேன். இன்று வரை தமிழ் மணம் திரட்டியில் மட்டும் இணைய முடியவில்லை. இணைந்தாலும் ஒன்றிரண்டு மாதங்களில் பதிவு/வோட்டுப் பட்டை காணாமல் போய்விடுகிறது.

Vidhoosh said...

////SUREஷ் (பழனியிலிருந்து) said...

கருவிப் பட்டை இருக்கிறது. நீங்கள் இன்னும் தமிழ்மணத்திற்கு அனுப்பவே இல்லையே.., பின்னர் எப்படி நாங்கள் வாக்களிப்பது..,
////

தமிழ் மணத்தில் பதிவுகள் தெரியும். ஆனால் வோட்டுப் பட்டையில் நான் (blog owner)கூட வோட்டு போடவே முடியாது. இப்படியேதான் எனக்கும் இருக்கும். ஒரே வித்தியாசம் என்னவென்றால் எனக்கு வோட்டுப் பட்டை தானாகவே காணாமலும் போய் விடுகிறது. மீண்டும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஆகும் நேரத்தில் ஒரு புதுப் பதிவே எழுதி விடுகிறேன் என்பதால், தமிழ் மணத்திற்கு நன்றிசொல்லி "பிரியும்" விடை அளித்து பை பை சொல்லி விட்டேன்.

Chitra said...

தமிழ் மணத்தில், நான் இன்னும் இணைக்கவில்லை. இவ்வளவு பிரச்சினை இருக்கா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறது வெ.ரா சார் . மாற்றம் இல்லை . அதற்கு ஒன்றும் கவலைப்பட வேண்டாம் . இது ரொம்ப வருத்தமான விஷயம் .

Radhakrishnan said...

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் தெகா அவர்களே. இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை என நினைத்து தமிழ்மணம் நிர்வாகத்தினைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும் எனும் நம்பிக்கை இருக்கிறது. நிரலியில்தான் பிரச்சினை என்பதால் பலமுறை மாற்றியமைத்துப் பார்த்துவிட்டேன், ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

நீங்கள் குறிப்பிட்டது போன்று நல்லதொரு இடுகைகள் என்றுமே தனித்துவம் பெற்று இருக்கின்றன.

Radhakrishnan said...

மிக்க நன்றி விதூஸ். சுரேஷ் அவர்களுக்கும், வானம்பாடிகள் ஐயா அவர்களின் ஆலோசனைக்கும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நல்லதொரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். ஏன் எதனால் இவ்வாறு நடக்கிறது என அறிந்துகொண்டு மீண்டும் தமிழ்மணம் கருவிப்பட்டை தங்களுக்கும் பயன்படும் வகையில் பதில் பெற்றுவிடுவேன் எனும் நம்பிக்கை இருக்கிறது. நன்றிகள் சுரேஷ் மற்றும் ஐயா.

Radhakrishnan said...

சித்ரா, உடனே பயந்துவிடாதீர்கள், பிரச்சினை எல்லாம் சிறிதுதான், ஆனால் அதைத் தீர்ப்பது எளிதாகத் தெரியாத காரணத்தால் பெரிதாகத் தெரிகிறது. விரைவில் தமிழ்மணத்தில் இணைந்துவிடுங்கள்.

Radhakrishnan said...

ஆ... இன்னும் உள்ளே வர இயலவில்லையா? நேரடியாக தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு தொலைபேசி போட்டுவிட வேண்டியதுதான். ;)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எனக்கும் இப்படிப் பலமுறை நடந்தது. பிறகு தானாகச் சரியானது. என்ன விடயம் என்று தெரிந்து கொள்ளவில்லை.

Radhakrishnan said...

தானாகச் சரியாகிவிடும் என நினைத்திருந்தேன், ஆனால் இன்னும் சரியாகவில்லை, சரியாகிவிடும் என நம்புகிறேன். மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.

Radhakrishnan said...

சமீபத்திய இடுகை ஒன்று நேரடியாக எந்தப் பிரச்சினையுமின்றி இணைந்துவிட்டது, மேலும் அந்த இடுகையின் மீது அழுத்தியவுடன் நேராக இங்கே வரவும் செய்தது, இப்பொழுது வாக்கு அளிக்கத்தான் வகை செய்ய வேண்டும். எவரேனும் டெம்ப்ளேட்டை இந்த தமிழ்மணம் விசயம் இருக்கும் இடத்தை இங்கு இடுகையிட்டால் பயன்படும்படியாக இருக்கும். மீண்டும் நன்றிகள்.

நசரேயன் said...

//Vidhoosh said...
நடுவில் ஒரு முறை தமிழ் மணம் வோட்டுப் பட்டையை பதிவர் சஞ்சய் காந்தி நிறுவி கொடுத்தார், ஆனால் வோட்டு போட முடியாமலேயே இருந்தது. இப்போது மீண்டும் தமிழ் மணம் காணாமல் போய் விட்டது. என்ன மீண்டும் அடுத்த வருடம் தமிழ் மணம் போட்டியில் சேர முடியாது. "சரிதான் போடா" என்று விட்டு விட்டேன். :))
தமிழிஷ் மட்டும்தான் எப்போதும் ஒரே மாதிரி stable ஆக இருக்குங்க.//

ஆங்கிலத்திற்கு மன்னிக்க

It is looks like your blog URL is forwarded from feedproxy, where as in rest of the blogs, it is just direct redirect from tamilmanam/google reader.

From google reader it is your url reference

http://feedproxy.google.com/~r/pakkodapapers/~3/syeGvXEnFEc/blog-post_04.html

other url

http://kudukuduppai.blogspot.com/2010/02/4.html.

Try removing feed burner and check it should work.

நசரேயன் said...

//வானம்பாடிகள் said...
சார். தமிழ்மண வாக்குப்பட்டை சில நேரம் இப்படி பணிசெய்யாமல் போகக்கூடும். காரணம் திரட்டியில் அல்ல. rss feed feedburner ஆக இருக்கும் பட்சத்தில் இது நிகழக்கூடும். எதுவாயினும், தமிழ்மணத்துக்கு எழுதுங்கள். உடனே சோதித்து ஆலோசனை சொல்லுகிறார்கள்//

அண்ணே சொல்லுறது தான் சரியா இருக்கும்

Radhakrishnan said...

மிக்க நன்றி நசரேயன்.

Chittoor Murugesan said...

தமிழ்மணம் தடை

என் எழுத்துக்களை ஆபாசம் என்று குற்றம் சாட்டி என் வலைப்பூவை தமிழ் மணம் தடை செய்துள்ளது. இதுவரை தமிழ் மணம் திரட்டிய என் பதிவுகளில் இல்லாத ஆபாசமா? உண்மைகாரணம் பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று ஜோதிடரீதியாக நான் எழுதிய பதிவுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன்

Radhakrishnan said...

இதுகுறித்து விளக்கம் கேட்டு பாருங்கள், அவர்கள் தகுந்த விளக்கம் தருவார்கள் என கருதுகிறேன். தங்கள் பதிவுகளில் ஆபாசம் இருந்தது என நீங்களே ஒப்பு கொள்கிறீர்கள். நீங்கள் திருந்துவீர்கள் என அவர்கள் எதிர்பார்த்து இருந்து இருக்கலாம். ;) சரியாக பிரபாகரன் பதிவு அமைந்துவிட்டது.