வெளிநாட்டில் விற்பது எல்லாம் திருட்டு டி.வி.டி வரிசையில் சேராமல் இருப்பது வரை மிகவும் சந்தோசம்.
நான் ஆங்கில படங்கள் மட்டுமல்ல, தமிழ் படங்கள் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் பல மாதங்களாக எந்த படம் வந்தாலும் சரி அதை டி.வி.டி வாங்கி பார்த்து விடுவது வழக்கமாக வைத்திருக்கிறேன், ஆனால் விமர்சனம் செய்தது இல்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொன்றுக்கும் ஒரு விமர்சனம் எழுதிவிடுவது என முடிவு செய்து இருக்கிறேன். எனக்குரிய அறிவைக் கொண்டு படத்தைப் பற்றிய தொழில்நுட்பம் பற்றியோ, நடிகர், நடிகைகள் எப்படி நடித்திருக்கிறார்கள் என்பது பற்றியோ என்னால் விமர்சிக்க முடியாது.
என்னால் தற்போதைக்கு இசையைப் பற்றியோ, இசையின் நுணுக்கம் பற்றியோ விமர்சனம் செய்ய இயலாது. ஆனால் என்னால் ஒரு சில வரிகளில் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய இயலும். அதன் வாயிலாக முதன் முதலில் வருவது இறுதியாக நான் டி வி டியில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் எனும் படத்தைப் பற்றியே.
ஆயிரத்தில் ஒருவன் பார்த்தபின்னர் ஆங்கிலப்படம் ஒன்றை பார்த்தது போன்று ஒரு உணர்வு இருந்தது. ஆங்கிலப் படங்கள் எனக்கு ஒருபோதும் புரிந்தது இல்லை, அதைப்போலவே இந்தப் படமும். ஆனால் என்னதான் சொல்ல வருகிறார்கள் என இரவு ஒரு மணி முப்பது நிமிடம் ஆகியும் பொறுமை இழக்காமல் பார்த்து முடித்தேன். படம் முடிந்தபோது உள்ளத்தில் ஒருவித எரிச்சல் எட்டிப் பார்த்தது. நல்லவேளை உடனே தூங்கிவிட்டேன்.
அடுத்த வரிசையில் இருப்பவர் நாய்குட்டி- டி வி டி விமர்சனம்.
8 comments:
படம் பாதிவரை நல்லாருக்கும் . படம் பார்த்து முடிக்கும் போது ஒருவித அயர்ச்சி ஏற்படும் . உண்மைய சொன்னீங்க சார் . நல்ல பிரிண்டா ?
ஆமா சொல்ல மறந்திட்டேன் . உங்க பிளாக் தமிழ்மணத் திரட்டி மூலமா ஓப்பன் ஆகலியே . உங்க புரபைல் மூலமா வந்தேன் . ஒரு வேளை சார் பிளாக்கை பிளாக் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சேன் .
:))) .
வணக்கம் ஸ்டார்ஜன், ஆமாம் சிறிது பிரச்சினை இருக்கிறது, அதை ஒரு இடுகையாகவே இன்று இரவு எழுதிவிடுகிறேன்.
ஆயிரத்தில் ஒருவன் பார்த்தபின்னர் ஆங்கிலப்படம் ஒன்றை பார்த்தது போன்று ஒரு உணர்வு இருந்தது. ஆங்கிலப் படங்கள் எனக்கு ஒருபோதும் புரிந்தது இல்லை, அதைப்போலவே இந்தப் படமும்.
.......நல்ல காமெடி கமெண்ட். தொடர்ந்து விமர்சனம் இந்த ஸ்டைல் இல் எழுதி அசத்துங்க.
நல்ல பிரிண்ட் தான் ஸ்டார்ஜன், வெளிநாட்டுக்கென சில பிரதிகள் உருவாக்குவார்கள் போலிருக்கிறது.
மிக்க நன்றி சித்ரா. விமர்சனம் பண்ணுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் அது எந்த தகுதி என்பதை தரம் பிரித்துக் கொள்வது மிகவும் கடினமானது.
//படம் முடிந்தபோது உள்ளத்தில் ஒருவித எரிச்சல் எட்டிப் பார்த்தது//
ஏன்னா உண்மை சுடத்தான் செய்யும்
பாருங்க நல்ல விஷயம் தமிழன் வெளி நாட்டுக்கு போனா தான் கிடைக்குது..(பிரிண்ட சொன்னேன்)
மிக்க நன்றி அசோக், மிக்க நன்றி அண்ணாமலையான். ம்ம்... கேமரா பிரதி கூட விற்பார்களே.
Post a Comment