இன்னும் கூட எனக்கு அதிசயமாய் இருக்கும்
உன்னால் எப்படி முடிந்தது
உன்னால் எப்படி முடிந்தது
பிரிவைப் பற்றி சிந்திக்கும் மனிதரிடம்
உறவின் பெருமையை வளர்த்தது எப்படி
வாடிய பயிரை கண்டு வாடியவர் போலே
ஆடை இல்லா மனிதர் கண்டு அகம்
கண்ணீர் வடித்தது ஆடை துறந்தாய்
அரிச்சந்திரன் பார்த்ததால் உண்மை தத்துவம்
உணர்ந்ததாய் உலகுக்கு சொன்னாய்
இங்கிலாந்து வந்தா பாரிஷ்டர் பட்டம் பெற்றாய்
கால் கடுக்க நடக்கவும்
ஒத்துழைப்பின்றி உணவின்றி போராடவும்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது
முதலில் கடிகாரமும் கையில் தடியும்
உன் படம் பார்த்துதான் உன்னைத் தெரியும்
சத்திய சோதனை படித்த பிறகே
இறந்தும் நீ இருக்கிறாய் எனப் புரியும்
அகிம்சை வழியில் சுதந்திரம் வாங்கி தந்து
சுடப்பட்டு நீ கிடைக்கையில்
நீ வாழ்ந்த காலங்களில் நான்
பிறந்து இருக்க கூடாதா
என் உயிர் தந்து இன்னும் வாழ்ந்து இருப்பேன்
உன் உயிர் சமாதியினில் வருகையில்
ஒன்றை மட்டும் எனக்குள் கேட்பென்
இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை வேண்டும்
இந்தியா என்றும் சிறந்திட வேண்டும்.
3 comments:
அந்த இடம் போனபோது என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில் இருந்தேன்..!
நல்ல கவிதை.. வாழ்துகள் நண்பரே.
அட அட...
மிக்க நன்றி ஷங்கர், அசோக்
Post a Comment