ஊரில் நடக்கும் அவலங்களையும்
நாட்டில் நடக்கும் அநியாயங்களையும்
பாருக்கு உணர்த்திட வேண்டி
போட்டிக்கு அனுப்பப்பட்ட கதையொன்று
சேற்றில் கரைந்து போனது.
பாவப்பட்ட மக்களின் உணர்வுகளை
கூவியழுது கேட்கும் உரிமைகளை
கவனத்துடன் எடுத்தாண்ட கதையொன்று
கவனிப்பாரற்று தெருவோரம் குப்பையானது.
தேர்வாகாத கதைகள் சொல்கின்றன
என்னைப்போல் எவரும் சிந்திப்பதில்லையென
மிகவும் இறுமாப்பு கொள்கிறேன்
எப்படிதான் உலகம் திருந்தும்
கண்மூடி இறுக்கம் அடைகிறேன்.
6 comments:
உங்கள் வலைப்பதிவில் ஏதோ கோளாறு போலருக்கு. வலைப்பதிவ் தலைப்பு வரவில்லை, டைட்டில் என்று வருகிறது. ஆக அதனால் ஏற்படும் பிரச்சினையால் திரட்டிகளில் ஐமீன் தமிழ்மணத்தில் பிரச்சினை வர வாய்ப்புண்டு. லெட்ஸ் ஸீ..
மிக்க நன்றி ரவி அவர்களே. இதோ அதை நான் சரிபடுத்தி விடுகிறேன், முன்னர் அவ்வாறு இருந்தபோது எவ்வித பிரச்சினை இல்லை, நான் எடிட்டர் பகுதியில் தமிழ் பகுதியைச் சேர்த்து புதிய எடிட்டர் உருவாக்கியபோதுதான் பிரச்சினை வந்தது.
எப்படிதான் உலகம் திருந்தும்
கண்மூடி இறுக்கம் அடைகிறேன்
.......it speaks volumes.
மிக்க நன்றி சித்ரா, சில வார்த்தைகள் அதிகம் பேசப்படுவதுண்டு.
கவிதை அருமை.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி அவர்களே.
Post a Comment