எத்தனை காலம் தான் அண்டி பிழைப்பது
இவ்வுலகத்தில் வாழ்ந்திட மாற்றம் ஒன்றே
மரபணுக்களில் ஏற்பட்டு வந்தது எனில்
நமது செல்களுக்கும் தானே உணவு
தயாரிக்க சொல்லித் தராதா மரபணுக்கள்
மரபணு முறைகொண்டு நம்மிலும்
ஏற்படுத்துவோம் புதிய மாற்றங்கள்
எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருப்பது
மரங்களை அழிக்க வேண்டாமென
எத்தனை மாநாடுதான் போடுவது
உலகம் வெப்பமாகி போகிறதென
மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்
உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்.
9 comments:
Beautiful...!
சிறப்பான கவிதை
நாம் தாவரமாகிவிடலாம் மனிதருக்கு பதிலாக நமக்குள்ளே வெட்டி கொள்வோமே என்ன செய்ய?
மிக்க நன்றி தீபா.
மிக்க நன்றி வசந்த். தன்னிறைவு அடைந்துவிட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை.
உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்..................அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்//
ஒரே நிறம் கொண்டு
பசி இல்லாதது, புசிக்க கனி தந்து..::))
அருமை..::))
நல்லா சமூக நோக்குடன் வெளிவந்துள்ள்ள கவிதை...
நல்ல கவிதை....
நன்றி தீபா...
மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சித்ரா,
மிக்க நன்றி ஷங்கர்
மிக்க நன்றி புலவன் புலிகேசி
மிக்க நன்றி சங்கவி
மிக்க நன்றி கமலேஷ்
Post a Comment