Tuesday, 19 January 2010

அறிவுரை

அறிவுரை என்பது எளிதாகக் கிடைப்பது என்பார்கள். எவர் வேண்டுமெனிலும் அறிவுரை சொல்லலாம் எனவும் சொல்வார்கள். அறிவுரை சொல்வோர் அதே அறிவுரைப்படி நடக்கிறார்களா என்பது பற்றி ஆராயவும் கூடாது எனவும் சொல்வார்கள். இதைச் சுருக்கமாக 'ஊருக்கு உபதேசம்' எனச் சொல்லப்படுவதும் உண்டு.

உட்கருத்து, வெளிக்கருத்து எனச் சொல்லிக் கொண்டே காரியத்தில் கருத்தாக இல்லாது இருப்போர் இவ்வுலகில் உண்டு. 'நான் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லும் யோக்கியதை எனக்கு உண்டு' என்பார் ஒரு கவிஞர்.

உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் நீங்கள் சொல்லிவிட்டு, அது எல்லோருக்கும் புரிய வேண்டும் என நினைப்பதும், அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதும் எத்தனை சிரமமான காரியம் தெரியுமா, எனவே எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்வதை உங்களது பணியாக வைத்துக் கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம் என அறிவுறுத்தும் அறிஞர் பெருந்தகைகளும் உண்டு.

நான் ஒன்றைச் சொல்வதற்கு முன் அதன்படி என்னால் வாழ முடிகிறதா என யோசித்து செய்துப் பார்த்து விட்டேச் சொல்வேன் என இருந்த ஞானிகளும் உண்டு. ஒரு கருத்தானது பிறருக்கு நன்மை விளைய வேண்டும் எனும் நோக்கில்தான் சொல்லப்படுவது, ஆனால் அதே கருத்தினை தீமை விளைவிக்கும் வகையில் வகைப்படுத்துவது எனும்போது கருத்துச் சிதைவு ஏற்படுகிறது.

தீபம் கொண்டு திருக்குறள் படிக்கலாம், கூரையையும் கொளுத்தலாம் என்பார் ஒரு கவிஞர். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை நீங்கள் எப்படி பயன்படுத்த நினைக்கிறீர்களோஅதன் பலன் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேகம். ஆயுதங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டிதான் உருவாக்கப்பட்டன என வைத்துக் கொண்டோமெனில் அதே ஆயுதம் பிறரைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாது போனோம்.

அவரவர் அறிந்த உண்மை அறிவே மிகும் எனும் நிலை இருப்பதினால், அவரவர் கருத்துப்படி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் சமாதானமும், அமைதியும், அன்பும், பணிவும், ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலும் என உலகைச் செம்மைப்படுத்த நாம் நம்மைச் செம்மைப்படுத்துவோம்.

16 comments:

Chitra said...

அவரவர் அறிந்த உண்மை அறிவே மிகும் எனும் நிலையானது இருப்பதால் அவரவர் கருத்துப்படி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் சமாதானமும், அமைதியும், அன்பும், பணிவும், ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலும் என உலகைச் செம்மைப்படுத்த நாம் நம்மைச் செம்மைப்படுத்துவோம். .......... well-said. good advice!

Paleo God said...

என உலகைச் செம்மைப்படுத்த நாம் நம்மைச் செம்மைப்படுத்துவோம்.//

சரியாக சொன்னீர்கள்..:)

கலகலப்ரியா said...

well said.. :)

Vidhoosh said...

very nice post.

i have a small request. please avoid addressing in singular form (like "nee, sei" pondravai). this may deviate reader.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.

மிக்க நன்றி பலா பட்டறை.

மிக்க நன்றி கலகலப்ரியா.

மிக்க நன்றி வித்யா. நீங்கள் சொன்னபடி திருத்தி அமைத்ததும், இப்பொழுது படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கருத்துக்கள்

பின்பற்றலாமே ...

Radhakrishnan said...

ஆமாம் ராஜா, நிச்சயம் பின்பற்றுவோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla idukai

ராமலக்ஷ்மி said...

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்!

தமிழ் said...

ச‌ரியாக‌ச் சொன்னீர்க‌ள்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

மிக்க நன்றி திகழ்.

CS. Mohan Kumar said...

நல்ல இடுகை. வலை சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு இங்கு வந்தேன்

Unknown said...

தீபம் கொண்டு திருக்குறள் படிக்கலாம், கூரையையும் கொளுத்தலாம் என்பார் ஒரு கவிஞர். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை நீங்கள் எப்படி பயன்படுத்த நினைக்கிறீர்களோஅதன் பலன் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது

ஆழமாகவும்,அழுத்தமாகவும் பதிவு தந்திருகின்றீர்கள்.
உண்மையில் கருத்தாழமிக்க பதிவு.
நன்றி
அபுல்பசர்

Radhakrishnan said...

மிக்க நன்றி மோகன்குமார். வலைசரத்தில் இந்த வார ஆசிரியர் டி.வி.இராதாகிருஷ்ணன் ஐயா அவர்கள்.

மிக்க நன்றி அபுல் பசர்.

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

அறிவுரை - இது ஒன்றுதான் இலவசமாக அதிகமாகக் கிடைப்பது. இருப்பினும் இவ்விடுகை அலசி ஆராய்ந்திருக்கிறது. நன்று நன்று

நல்வாழ்த்துகள்

Radhakrishnan said...

உண்மைதான் ஐயா, ஆனால் பிறர் தரும் அறிவுரைகள் பல பயனுள்ளதாகவே இருக்கின்றன.