அரசியல்வாதிகள்
வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்
அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்
ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு
நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா
உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்
கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்
எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.
14 comments:
வெற்றி பெற வாழ்த்துகள்
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திகழ் அவர்களே.
சாடல் ந்ல்லாத்தான் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.... பொங்கல் வாழ்த்துக்கள்
நல்லாருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்.
//சி. கருணாகரசு said...
சாடல் ந்ல்லாத்தான் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.... பொங்கல் வாழ்த்துக்கள்//
இனிய பொங்கல் வாழ்த்துகள். சாடல் என்பதை விட நமது வாழ்க்கையில் இதுதான் நிதர்சனம் எனவும் கொள்ளலாம் என நினைக்கிறேன். மிக்க நன்றி கருணாகரசு அவர்களே.
//வானம்பாடிகள் said...
நல்லாருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்.//
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.
எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே//
தோலை உரித்துக்காட்டி விட்டீர்!!
வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும் ..............
this is from "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா.
:-)
கவிதை நிஜத்தை துகில் உரித்து சொல்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும்.
//தேவன் மாயம் said...
தோலை உரித்துக்காட்டி விட்டீர்!//
இனி அறுவை சிகிச்சையை ஆரம்பித்துவிடவேண்டியதுதான் டாக்டர். :) மிக்க நன்றி.
Chitra said...
//வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும் ..............
this is from "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா.
:-)
கவிதை நிஜத்தை துகில் உரித்து சொல்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும்.//
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் சித்ரா அவர்களே.
இந்த கவிதையை முன்னரே யோசித்து வைத்திருந்தேன். உங்கள் வலைப்பூ தனை பார்த்தபோது இந்த வார்த்தையை மாற்றலாமா என யோசித்தேன். பின்னர் இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன் ஏனெனில் கொஞ்சம் வெட்டிப் பேச்சுதானே தங்களுடையது. :)
வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றீர்.
புரிய வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் சரி
//வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றீர்.
புரிய வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் சரி//
இருளில் இருக்கிறார்களே, வெளிச்சம் அடிப்போம் என வெளிச்சம் அடித்தாலும், வெளிச்சத்தினால் கண்கள் கூசுகிறது என கண்ணை மூடி இருளில் இருப்போர்கள் புரிந்து கொள்ளும் காலம் என்பது இல்லவே இல்லை. மிக்க நன்றி சகோதரி.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சக்திவேல்.
Post a Comment