Tuesday, 26 January 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5

மெண்டலீவ் வேதியயில் பாடத்தில் விரிவுரையாளாராக பணியாற்றிக் கொண்டு இருந்தார். தான் படித்துச் சொல்லித்தர வேண்டி புத்தகங்கள் தேடினார். அவருக்கு எந்த புத்தகமும் திருப்தி அளிக்கவில்லை. தான் ஒரு புத்தகம் எழுதினால் என்ன என அவருக்குத் தோன்றியது. 

அந்த காலகட்டத்தில் அதற்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் 50 க்கு மேற்பட்ட தனிமங்களைக் கண்டறிந்து இருந்தனர். 

அனைத்து தனிமங்களையும் பார்த்த மெண்டலீவ் அதனை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடக்கினார். அவர் வரிசைப்படுத்த முயன்ற முறை அணுவின் எடையைப் பொறுத்துத்தான். அந்த கால கட்டத்தில் ஹைட்ரஜனை வைத்தே மற்ற அனுக்கள் எடைச் சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அணுவின் எடைக்கும் வேதியியல் தன்மைக்கும் தொடர்பு உண்டு என கருதியே அவ்வாறு செய்தார். அவர் செய்த ஒரு மாபெரும் பணியானது மேலும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டி உள்ளது என இடைவெளிகள் விட்டு வரிசைப்படுத்தினார். ஆனால் சோதனையாக கதிரியக்கத்தன்மையுள்ள சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனை முறையாகச் செய்யமுடியவில்லை, காரணம் அளவுச் சரியாகக் கிடைக்காததுதான்.மேலும் இது போன்று அணுவின் எடையைப் பொறுத்து வகைப்படுத்தியதன் பொருட்டு தனிமத்தின் வேதியியல் தன்மையானது ஒத்துவரவில்லை. ஆனால் இந்த அரிய சிந்தனைதான் இன்றைய தனிம அட்டவணையின் முன்னோடி எனச் சொன்னால் யார் மறுப்பார்கள். 

பின்னால் மோஸ்லி அணுவின் எண்களை வைத்து வரிசைப்படுத்தி உருவாக்கினால் சரிவரும் எனச் சொன்னார். முக்கியமாக எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டன, அதுவரை அணு எடை என்பது தான் அவர்களுக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றை வைத்துப் பின்னப்பட்ட விசயங்கள் பின்னாளில் வேறு கிடைத்ததும் மாற்றம் செய்ய ஏதுவாகின. 

பல பொருட்கள் ஒன்று என இருந்தவர்களுக்கு சில அறிவியல் சோதனைகள் அவைத் தனித்தனியான தனிமங்கள் ஒன்று சேர்ந்ததால் வந்தது எனக் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்து இருக்கக்கூடும். 



எங்கு எங்கு எப்படி இந்த எலெக்ட்ரான் செல்கிறது என கண்டு கொள்ள முடியும் அதுவும் குவாண்டம் கொள்கை கணிப்பினால். 

ஒரு பொருளானது எப்படி பார்க்கப்படுகிறது எனில் ஒளியானது பொருளின் மேல் பட்டு பிரதிபலித்து அந்த ஒளியானது நமது கண்களில் பட்டு நமக்கு அந்த பொருள் தெரிகிறது என்பது அறிந்ததே. நுண்ணிய பொருள்களை ஒளியினை குவித்து ஒளி நுண்ணோக்கியால் நாம் அதனை பெரிதுபடுத்தி காண்கிறோம் அதாவது அளவில் சிறியதை பெரிது படுத்துகிறோம், நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு எல்லைகள் உண்டு. 



நேனோ தொழில்நுட்பம் நுண்ணிய பொருள் பற்றி மிகவும் ஆராய்ந்து வருகிறது. இது தவிர்த்து எலெக்ட்ரான் நுண்ணோக்கியும் உண்டு. இதன் மூலம் மேலும் நுண்ணிய பொருள்கள் காணலாம். அணுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியால் தனிப்பட்ட அணுக்களை காணாலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை யாரும் எலெக்ட்ரானைப் பார்த்ததாக இல்லை, அதனுடைய போக்கினை இப்படித்தான் இருக்கும், இங்குதான் இருக்கும் என கணிக்கும் திறமை நம்மில் உண்டு. 


(தொடரும்)


பாதை 1


பாதை 2


பாதை 3


பாதை 4

10 comments:

Chitra said...

It is a good and useful article.

புலவன் புலிகேசி said...

மெண்டலீவ் கண்டுபிடிப்புதான் அந்த அட்டவனை மற்றும் பல ஆனுகண்டுபிடிப்புகளுக்கு துவக்கம். நல்ல பகிர்வு நண்பரே..தொடருங்கள்

சுந்தரா said...

ஐந்துபாதைகளிலும் சென்று,அறியாத பல தகவல்களை அறிந்துகொள்ளமுடிந்தது...

தொடருங்கள் ரங்கன்!

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா,

மிக்க நன்றி புலவன் புலிகேசி

மிக்க நன்றி சகோதரி.

vasu balaji said...

அருமையான தகவல். தொடருங்கள்.:)

ப.கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது.

சாமக்கோடங்கி said...

பயனுள்ள தகவல்.. தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி..

Radhakrishnan said...

மிக்க நன்றி வானம்பாடிகள் ஐயா.

மிக்க நன்றி கந்தசாமி ஐயா.

மிக்க நன்றி பிரகாஷ்.

தமிழ் உதயம் said...

அறியாததை அறிய வைத்தது, ஆராய்ச்சியாளனின் பாதை.

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் உதயம்.