Tuesday, 8 September 2009

உனக்காக ஒரு பொழுது

நீ பிறந்தவுடன்
நீதான் எனக்கென
எனது கன்னம் பிடித்து
தட்டிக்கொடுத்து நம் திருமணம்
குறித்துப் போன உன் தந்தை!

முடிந்து வளரும் தினமெல்லாம்
நான் பார்த்து ரசிக்க
நீ வாங்கி வந்த வரமாம்
உனது பிறப்பிற்கு பின்னர்
மறுபிறப்பு எடுத்த என் உயிர்
பொய் பேசாமல் சொல்லும் என் அம்மா!

அருகருகே அமர்ந்த மழலை மொழிகள்
காதல் புரியாமலே காதல் பார்வைகள்
முடியாத சக்தியெல்லாம் என்னில் இருப்பதாய்
என்னுயிர் காக்கின்றாய் உன்னுயிர் காத்துக்கொண்டு!

உன்னில் என்னை புதைத்த காலங்கள்
எனது கனவினை சுமக்கும் நேரங்கள்
சிறுவயது காலம் முதல்
இவ்வயது காலம் வரை
எனக்காக நீ வாழ்வது
எனக்காக மட்டுமில்லை அறிவாயா?
உனக்காக ஒரு பொழுதேனும்
உனக்காக மட்டும் ஒதுக்கி வை
உன்னில் இருக்கும்
என்னைப் பற்றிய நினைவுகள்
இளைப்பாறட்டும்!

3 comments:

vasu balaji said...

வெ.இரா. இன்னொரு அற்புதமான வெளிப்பாடு. மிக மிக அழகு.

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா சிறப்பா காதலை வெளிப்படுத்தியிருக்கீங்க சார்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா, மற்றும் வசந்த் அவர்களே.