Tuesday, 15 September 2009

அழகிய சிலை

நடுங்கியே கைகள்
வடித்தன சிலை
கோணலும் மாணலுமாய்
என் கண்களுக்கு

பொருட்காட்சியில் வைத்தேன்
அருள்பாலிப்பது போன்றே
யார் இதை வாங்குவார்
அச்சத்தில் நான்

சிலைதனை எடுத்து
ஒருவர் ரசிக்கையில்
விலை சொல்ல மனமில்லை
விலகினேன் நான்.

8 comments:

Radha N said...

அழகு என்பது அவரவர் பார்வைக்கு வித்தியாசப்படும். மாறுபாடுகள் கொண்ட ரசனைகளால் தான் மாறுபாடுகள் களையப்படுகின்றன.

vasu balaji said...

/சிலைதனை எடுத்து
ஒருவர் ரசிக்கையில்
விலை சொல்ல மனமில்லை
விலகினேன் நான்./

படைப்பாளியின் குழந்தையல்லவா. அருமை

Radhakrishnan said...

மிக்க நன்றி நாகு, மற்றும் வானம்பாடிகள் ஐயா.

நிகழ்காலத்தில்... said...

//சிலைதனை எடுத்து
ஒருவர் ரசிக்கையில்
விலை சொல்ல மனமில்லை
விலகினேன் நான்//

உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

அற்புதமான வரிகள்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

சந்தனமுல்லை said...

அழகிய உணர்வு! :)

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி, எழுதப்பட்ட ஒரு கவிதை, கவிதையாகவே இல்லை என விமர்சனம் வந்தபோது எழுதிய கவிதை இது.