காதலித்தால் வருமாம்
கற்பனை இருந்தால் வருமாம்
கலங்கி கிடக்கும் நெஞ்சம்
புலம்பி தவிக்கையில் வருமாம்
துயரம் கண்டு துடிதுடிக்கையில்
துள்ளிக்கொண்டு சீறிப்பாய்ந்து வருமாம்
கண்ணை மூடி கடவுளை நினைக்கையில்
கனிந்து தவழ்ந்து வருமாம்
கண்ணீர் சிந்தி அழுவதற்கு பதில்
எழுதுகோல் சிந்தி அழுது வருமாம்
வார்த்தை அலங்காரம் செய்துவிட
வேடிக்கைக் காட்டி வருமாம்
வண்ணத்துபூச்சிப்போலே பறந்து
வண்ணகனவுகளுடன் வருமாம்
வண்ணகனவுகளுடன் வருமாம்
எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம்
தோழமையாகவும் வருமாம்
இனி
கவிதை வந்தவிதம்தனை
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
10 comments:
கவிதை எப்படி எல்லாம் வரும் என்று அத்தனையையும் சொல்லி விட்டீர்கள் நண்பரே.
கவிதை அழகாக இருக்கிறது.
மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.
wow. super sir.
-vidhya
மிக்க நன்றி வித்யா அவர்களே.
கவிதை அழகாக இருக்கிறது.
www.அருமை.com
www.சூப்பர்.com
//எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம் //
நானெல்லாம் இந்தக்கோஷ்டிதான். கவிதை எழுத வராது
எப்படி வரும்னு ஆராய்ச்சி செய்து அத்தனையையும் சொல்லிட்டீங்க. அப்புறம் எதைச் சொல்ல ரங்கன்??? :)
மிக்க நன்றி ஐயா, சரவணக்குமார், சின்ன அம்மிணி மற்றும் சகோதரி அவர்களே.
Post a Comment