இருக்கும் பூமியில் தண்ணீர்
இல்லாமல் போகும் நிலைக்கு
மாற்றுவழி கண்டு மனம்
மகிழ்ந்திட வழியின்றி
இல்லாமல் போகும் நிலைக்கு
மாற்றுவழி கண்டு மனம்
மகிழ்ந்திட வழியின்றி
பக்கத்து கிரகத்தில்
சேரோடு சகதியில்
தண்ணீர்தானா என தவித்து
சேரோடு சகதியில்
தண்ணீர்தானா என தவித்து
பூமியில் வாழும் மனிதர்களுக்கு
நல்வழி காட்டி மகிழாது
பொருளையெல்லாம் கொட்டி
பிஞ்சு உள்ளம் வெந்து
சாவதை கண்டு துடிக்காது
என்ன இந்த விஞ்ஞானம்
எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!
4 comments:
///எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!///
தனதருகில் இருக்கும் தூயோர் துயர் துடைக்காமல், என்ன விந்தையான உலகம் உங்கள் சிந்தனை கவிதை அருமை ஐயா.
நல்ல சிந்தனை வெ.இரா. இருப்பதும் போய் பறப்பதும் போய்விடுமோ என்ற பயம் எனக்கும் உண்டு.
wow. what a thought! excellent.
--vidhya
அனைவருக்கும் மிக்க நன்றி. எது எது நடப்பினும் அதது அதன் வேலையைப் பார்த்துக் கொண்டே போகும். இதுதான் உலக நியதி.
Post a Comment