Tuesday, 25 August 2009

வலைப்பூ கண்டு மிரண்டு போனேன்

உலகில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன, பிரச்சினை இல்லாத உலகம் காண வேண்டும் என நினைப்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்க முடியும். பிரச்சினைகளுடன் வாழ்ந்து அதிலிருந்து கொண்டே பிரச்சினைகளை வென்று அடுத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்வதுதான் நிதர்சனம்.

நல்லது, பிரச்சினை முடிந்துவிட்டது என அமைதியாக எவராலும் இருக்க இயலாது. திறம்பட வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் நமது மனதில் உறுதியுடன் இருத்தல் அவசியம் என்பதை அறிவோம்.

சில மாதம் முன்னர் அன்பரின் 'நிகழ்காலத்தில்' எனும் வலைப்பூவிற்குச் சென்றபோது வலைப்பூ மால்வேரினால் பாதிக்கப்பட்டுள்ளது, மீறிச் சென்றால் உங்கள் கணினி பாதிக்கப்படும் எனும் எச்சரிக்கையைக் கண்டு பல நாட்களாக அவரது வலைப்பூவினைப் பார்க்காமலே இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது எனப் பார்த்தபோது அன்பர் சக்திவேலின் 'படிக்காத பக்கங்களில்' ஒரு இடுகை கண்டேன், எந்த எந்த திரட்டிகளில் எல்லாம் வலைப்பூவினைச் சேர்க்கக் கூடாது என. அவ்வாறு சில திரட்டிகளில் இணைக்கும்போது மால்வேர் பாதிப்பு வரும் என அறிந்தேன். அதன் காரணமாகவே பல தமிழ்திரட்டிகளினை முழுவதுமாகத் தவிர்த்தேன்.

மேலும் எனது வலைப்பூவில் முதன்முதலாக தன்னை இணைத்துக் கொண்ட ஜெஸ்வந்தி அவர்களின் வலைப்பூவும் இதே பாதிப்பு அடைந்ததைக் கண்டு அவரது படைப்புகளை படிக்க முடிவதில்லை.

இப்படியிருக்க நேற்று எனது வலைப்பூ விகடன்.காம் மூலம் மால்வேர் கொண்டுள்ளது என எனக்கு எச்சரிக்கை வர என்ன செய்வது எனத் தெரியவில்லை. இருப்பினும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் பின்னூட்டம் பார்த்தபின்னர் கூகிளைத் தொடர்பு கொண்டு மால்வேர் விசயம் பற்றி அறிவித்தேன். இன்று மால்வேர் எச்சரிக்கை இல்லாமல் வலைப்பூ திறந்தது.

இந்த மால்வேர் எச்சரிக்கை பாதிக்கப்பட்ட பிற தளங்களினால் நமது வலைப்பூக்களுக்குத் தெரிவது போலும்! இது கூகிள் குரோமினால் மட்டுமே அறிய முடிகிறது.

ஆஸ்த்மா தொடர் ஆரம்பித்த பின்னர் தான் இந்தப் பிரச்சினை வந்தது. விகடன்.காம் தளத்தின் ஆர்வம் புரிந்து கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினை உங்களுக்கும் நேர்ந்தது உண்டா?

10 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் இந்தப் பதிவைப் படித்த பின்னர் தான் என் வலையத்தில் இந்தப் பிரச்சனை உண்டு என்று அறிகிறேன். எனக்கு எதுவும் தெரியவில்லை. தொடரும் எந்த நண்பர்களும் எடுத்துச் சொல்லவில்லை. என்ன செய்து சரியாக்கினீர்கள் என்பதை எனது மெயிலுக்கு அறியத் தாருங்கள். நன்றி.
jeswanthymathavan@gmail.com

கோவி.கண்ணன் said...

:)

பாலோயராக ஆபாச வெப்தளங்களெல்லாம் வலைப்பக்கங்களில் இணைகிறது, அதைத் கிளிக் கி அங்கே வருவார்க்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் போல என் வலைப்பக்கத்து 18+ என்கிற தளம் பாலோயராக இணைய அதை நான் ப்ளாக் செய்தேன்

Radhakrishnan said...

கூகிளில் நமது அக்கவுண்ட் டின் முகப்புப் பக்கத்தில் பிரச்சினைகளைத் தெரிவிக்கச் சொல்லி ஒரு இணைப்பு இருந்தது, மால்வேர், ஸ்பைவேர் போன்றவைகளால் பாதிப்பு அடைந்த தளம் என.

அதன் மூலம் எனது தளத்தில் பாதிப்பு ஏற்பட்டதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். நிலைமை சரியாகிவிட்டது.

அப்பக்கத்தை ஸ்கிரீன் ஸாட் எடுக்க முடிந்தால் எடுத்து தங்களுக்கு அனுப்புகிறேன்.

ஒருவேளை விகடன்.காம் தன்னைச் சரிப்படுத்தி இருந்தாலும் இருக்கலாம் என நினைக்கிறேன். மிக்க நன்றி.

Radhakrishnan said...

ஹா ஹா கோவியாரே, உங்களை அதிகமாகவே மிரளச் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். உங்கள் வலைப்பூ ஏதேனும் பிரச்சினையில் இருக்கிறதா என நேற்று சரிபார்த்தேன், எந்தவொரு பிரச்சினையும் இல்லை, ஆனால் என்னால் தான் பதிவிட முடியவில்லை. உங்களின் 'கசப்பான பதிவு' இடுகை யூத்புல் விகடனால் தேர்வு செய்யப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது.

நிகழ்காலத்தில்... said...

சில திரட்டிகளின் வோட்டுப் போடும் பட்டன் நிறுவி இருந்தால் மால்வேர் பிரச்சினை என்று படித்த ஞாபகம் உண்டு.

இப்போது நிகழ்காலத்தில் எப்படி இருக்கிற்து

arivhedeivam@gmail.com

முடிந்தால் தகவல் கொடுங்களேன்

நன்றி

Radhakrishnan said...

நிகழ்காலத்தில் இப்பொழுது எந்தவொருப் பிரச்சினையும் இல்லை, அதனால்தான் ஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன் என்ற இடுகைக்குப் பின்னூட்டம் இட முடிந்தது ஐயா. மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.

Vidhoosh said...

I too faced this problem, last week. then, i wrote to Google, the issue was cleared within half an hour.
--vidhya

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா.

கிரி said...

//பிரச்சினைகளுடன் வாழ்ந்து அதிலிருந்து கொண்டே பிரச்சினைகளை வென்று அடுத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்வதுதான் நிதர்சனம்.//

வழிமொழிகிறேன்

சார் உங்களுக்கு ஒரு ஆலோசனை

உங்க மாத தொகுப்பு பதிவுகளாக வைத்து இருக்கும் முறையால் உங்கள் பழைய பதிவுகளை மற்றவர்கள் படிக்கும் வாய்ப்புகளை தடுக்கிறீர்கள்.. இதை என் பதிவில் உள்ளது போல மாற்றி அமைத்தால் உங்கள் புதிய பதிவிற்கு வருபவர்கள் உங்களின் மற்ற பதிவுகளையும் படிக்க வாய்ப்பு உள்ளது..

உங்களின் மால்வேர் பற்றிய எச்சரிக்கைக்கு நன்றி

Radhakrishnan said...

மிக்க நன்றி கிரி அவர்களே, இதோ மாற்றியமைத்து விடுகிறேன்.