துள்ளும் மில்லி விநாடியிலும்
மனம் ததும்பும் பொருள் கொண்டு
மனம் ததும்பும் பொருள் கொண்டு
அருள்கொண்ட தூயவனை
அன்பால் சிந்தித்து அழகிய தமிழில்
போற்றி போற்றி பாடிய பாவினில்
பொல்லாத சிந்தனை நீங்கும்
கண்கள் அலையடித்து இதயம் செழிக்கும்
உன்னை நோக்கி நானும்
ஏங்கியே எழுதுகிறேன்
நானும் ஓர் நாள்
ஆழ்வார்களில் ஒருவனாய்
நாயன்மார்களில் ஒருவனாய்
மாறிட வேண்டி
மனமுருகி இருக்கையில்
மெல்லமாய் வந்து
சொல்லிச் செல்கிறது தும்பி
பலன்நோக்கி செய்யும் செயலதில்
இறைவனது சிந்தை நிற்பதில்லை
எழுதுவதால் மட்டும்
ஆழ்வார்கள் ஆவதில்லை
எழுதுவதை மட்டுமே
நாயன்மார்கள் செய்ததில்லை
நாணிக் கொள்கிறேன்
அவர்கள் போன்று
ஆகமுடியாது போவதற்கு!
2 comments:
ஆஹா.. தங்கள் ஏக்கத்தை அருமையாக வடித்துள்ளீர்கள்.. ஆழ்வார்கள் பக்தியில் ஆழ்ந்தவர்கள் மட்டுமல்ல நம்மையும் பக்தியுள் ஆழ்த்துபவர்கள், அதனாலே தான் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.
அது மட்டுமல்ல, மக்கள் சேவையும், அன்பே வாழ்க்கை எனவும் வாழ்ந்து வந்தார்கள். மிக்க நன்றி ராகவ் அவர்களே.
Post a Comment