தோன்றலின் தோன்றாமை நன்று.
புகழ் எனும் மாயைக்கு உட்பட்டா திருவள்ளுவர் 1330 குறள்களையும் எழுதி வைத்திருப்பார். புகழ் அடைய வேண்டும் எனும் நோக்கத்தை முன்னிறுத்தியா திருவள்ளுவர் மெனக்கெட்டு உட்கார்ந்து எழுதி இருப்பார்.
தனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்வது அவருக்கு கடமையாகத் தெரிந்திருக்க வேண்டும். தான் எழுதி வைத்ததைப் படிப்பவர்கள் வாழ்வில் நன்றாக இருப்பார்கள் எனும் நம்பிக்கை அவருக்குள் இருந்திருக்க வேண்டும்.
தன்னை காலம் காலமாக அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்றோ, தனது எழுத்து அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்றோஅவர் சிந்தித்து இருப்பாரா என்பது யோசிக்க முடியாத விசயம். ஆனாலும் எழுதி வைத்தார்.
அவரது எழுத்து பறைசாற்றுவது ஒன்றுதான். எந்தவொரு காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதப்படும் எழுத்து எப்போதும் நிலைத்து நிற்கும். அதற்கு அழிவில்லை, அதனை அழியும் வகையில் மக்கள் விடப்போவதுமில்லை. நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். மொழி அத்தனையும் அழிந்தால் மட்டுமே திருக்குறள் அழியும். அத்தனை சிறப்பு மிக்க எழுத்து அது. இது வாழ்வில் திருவள்ளுவர் தனது எழுத்துக்குக் கிடைக்கச் செய்த மாபெரும் வெற்றி. வெற்றி பெற வேண்டுமெனவா அவர் எழுதி இருப்பார்?
தனக்குத் தெரிந்த ஒன்றை பிறருக்கு பலன் தரும் வகையில் இருக்குமென்பதை உணர்ந்து எழுதி வைத்தார். அதன் பலன் இப்போதும் திருக்குறள் பெரிதாகப் பேசப்படுகிறது.
எப்படி ஜெயிப்பது என்பதன் ரகசியம் இதுதான். இதை அறிந்து கொண்டால் நமது படைப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஆனாலும் அந்த ரகசியத்தை அறிந்து வைத்திருந்த போதும் ஒரு முயற்சியும் இல்லாமல், எழுதும் முனைப்புடன் இல்லாமல் இருக்கும்போது ரகசியம் ரகசியமாகவே இருந்துவிடும் வாய்ப்புதான் அதிகம்.
எனவே சிந்தனைகளைச் செழுமையுடன் எழுதித் தொடர்வோம், எப்பத்தான் ஜெயிக்கிறது மறைந்து எப்பவும் ஜெயிக்கிறது எனத் ட்தெரியும்.
பல போட்டிகளில் கலந்து கொண்டு எழுதி இருக்கிறேன். ஒருமுறையும் வெற்றி கண்டதில்லை, அதற்காக வருந்துவதும் இல்லை. உழைப்பின் மேல் மனம் வைத்தால் தானே மேலும் மேலும் மெருகேற்ற மனம் வரும். நமது முயற்சியை நாம் கைவிடாமல் இருந்தால் நமது எழுத்து எந்த காலத்துக்கும் பேசப்படும்.
வலைப்பூ பக்கம் வந்த பின்னர் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளுமே தோல்வியைத் தழுவி இருக்கின்றன. எதிர்பார்த்த ஒன்றுதான் எனினும் எழுத்துக்கு அது ஏமாற்றமாகவே இருந்திருக்கும், ஏன் என்னை இவன் இப்படி எழுதுகிறான் என!
4 comments:
கவலை படவேண்டாம். ஜாம்பவான்கள் பலரும் பங்கேற்ற போட்டி அது. நாம் பங்கேற்றதே, நமக்கு வெற்றிதான்.
எழுதிக் கொண்டே இருப்போம்.
சிவராமன் (பைத்தியக்காரன்) வொர்க் ஷாப் போட போறார் பாத்தீங்களா?
--வித்யா
நாமும் ஜாம்பவான்கள் தானே வித்யா.
எந்தவொரு விசயத்தையும் பொறுப்புடன் செயல்படுத்தமாட்டேன்கிறேன் எனும் கேள்விக்குறி மட்டுமே என்னுள் எப்போதும் இருக்கிறது.
ஆம், எழுதிக் கொண்டே இருப்போம்.
பார்த்தேன், வொர்க் ஷாப் தனில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. நீங்கள் கலந்து கொண்டபின்னர் விரிவாக எழுதுங்கள், தெரிந்து கொள்கிறேன்.
மிக்க நன்றி வித்யா. தாங்கள் எழுதிய சிறுகதையை விரைவில் படித்து விடுகிறேன்.
iwrote thirukkural version like appliedscience-duraibharathy@gmail.com
வாழ்த்துகள் வித்யாஷங்கர் அவர்களே.
Post a Comment