Tuesday, 7 July 2009

வாழ்க்கையில் சீரழிவது எப்படி?

முன்னுரை:-

நாம எல்லோருக்கும் பொதுவா தெரிஞ்சிக்கிறஆசை எப்படி இருக்கும்னு பார்த்தாக்க, எப்படி வாழ்க்கையில முன்னேறுரது, அப்புறம் எப்படி கோடி கோடியா சம்பாதிக்கிறது, எப்படி நூறு வயசுக்கு மேலயும் வாழறதுனு சொல்லிக்கிட்டேப் போகலாம்.

நாம் ஒருத்தருக்கும் வாழ்க்கையில சீரழியறது எப்படினு தெரிஞ்சிக்கனும்னு ஆசை இருக்கிறதுல்ல! ஏன்னா அதுதான் தினமும் நாமப் பாத்துக்கிட்டு இருக்கமேனு ஒரு நினைப்பு நமக்கு.

இருந்தாலும் எப்படி வாழ்க்கையில சீரழியறதுனு ஒரு புத்தகம் போடலாம்னு யோசனை வந்துச்சு, அதனால எழுதப் போறதுதான் இனிமே.

8 comments:

Thekkikattan|தெகா said...

:-)) சும்மா வாழ்வை விட்டாவே அது பாட்டுக்கு நடந்துட்டுப் போகுது...

சரி எழுதுங்க நானும் கத்துக்கிறேன் :-)

Radhakrishnan said...

வணக்கம் தெகா அவர்களே. வாழ்வை அப்படியெல்லாம் அதுபாட்டுக்கு விடக்கூடாது என்பதைக் குறித்துத்தான் எழுத இருக்கிறேன்.

உங்களிடமிருந்துதான் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

எழுதுங்க சார் காத்திருக்கோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படி புத்தகங்கள் ஜெயிக்கிறதுங்கறது புரிஞ்சுக்கிட்டு புத்தகம்போட நல்ல ஐடியா கண்டுபிடிச்ச.. நீங்க வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்க எந்த புத்தகம் படிச்சீங்க அதும் சொல்லுங்க ப்ளீஸ்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேலிருக்கும் பின்னூட்டத்தில் ”எப்படி? புத்தங்கங்கள்“ என்று மேற்கோளுக்கிடையில் வரவேண்டும்..

Radhakrishnan said...

//அக்பர் said...
எழுதுங்க சார் காத்திருக்கோம்.//

அடடா! நிறைய நாட்கள் காக்க வைத்துவிடுவேன் போலிருக்கிறதே! மிக்க நன்றி அக்பர் அவர்களே.

Radhakrishnan said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
எப்படி புத்தகங்கள் ஜெயிக்கிறதுங்கறது புரிஞ்சுக்கிட்டு புத்தகம்போட நல்ல ஐடியா கண்டுபிடிச்ச.. நீங்க வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்க எந்த புத்தகம் படிச்சீங்க அதும் சொல்லுங்க ப்ளீஸ்//

ஹூம்! பலருக்கு ஐடியா எளிதாக கண்டுபிடிக்கத் தெரிந்திருக்கும், ஆனால் செயல்படுத்துவது என்பது தெரியாது! அதுபோலத்தான் நானும்னு என்னை நினைச்சிக்கோங்களேன்.

ஆனா ஒரு விசயம், நான் எழுதப் போற இந்த புத்தகத்தை உங்களை மாதிரி எல்லாரும் படிச்சாக்கா வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படினு எனக்குத் தெரிஞ்சிரும், மிக்க நன்றி முத்துலெட்சுமி அவர்களே.

Radhakrishnan said...

//சென்ஷி said...
:-)))))))//

சில சிரிப்புகளின் அர்த்தங்களை அத்தனை எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை, ஆனால் ஒருவரது சிரிப்பின் வெளிப்பாடு மூலம் மற்றொருவரின் செயல், எழுத்து நகைப்புக்குரிய விசயமா, போற்றத்தகுந்த விசயமா என்பதை அறிந்து கொள்ளலாம்.

மிக்க நன்றி சென்ஷி அவர்களே.