Friday, 3 July 2009

காதல் மட்டும் - 12

அருளுக்கு ஓர் உலகம் சொல்லி
பொருளுக்கு ஓர் உலகம் சொல்லி
இனம் பிரித்த விதத்தில்
காதலுக்கு ஏது ஓர் உலகம்

அலங்காரம் கொள்ளாமல்
சிறு சப்தமும் புகாமல்
வெறுமையில் ஓர் உலகம்
காதலுக்கு இல்லை அவ்வுலகம்

பிரித்து வைப்பதை விரும்பாமல்
அருளிலும் பொருளிலும் வெறுமையிலும்
காதல் மட்டுமே உலகம்.

No comments: