Friday, 13 February 2009

தலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை

குரு பார்வையும், சனி பார்வையும் நமது ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ராகு கேதுப் பெயர்ச்சிகளுக்குப் பெரும் முக்கியத்துவம் தராவிட்டாலும் சனிப்பெயர்ச்சிக்கும், குருப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருவது பலரும் அறிந்திருக்கக்கூடும் விசயமே. இதில் அறிவியலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் ஒரு விசயம் கண்ணுக்குப் பட்டது. அவ்விசயத்திற்கு விரைவில் வருகிறேன்.

பூமிக்கு மற்ற கிரகங்களினால் பாதிப்பு உண்டு எனும் தம்பி முரளியின் பார்வை மிகவும் விசாலமானது. வாழ்த்துகள் தம்பி முரளி. பொதுவாக சூரியனின் கடுமையான கதிர்கள் நமது பூமியில் விழாத வண்ணம் வெள்ளி, புதன் கிரகங்கள் பாதுகாத்து வருவதும், பூமியானது தனது காந்த சக்தியால் அதுபோன்ற விசமிக்க கதிர்களை புறந்தள்ளிவிடும் தன்மையுடையது என நாம் அறிவோம்.

இதனைத் தாண்டி 1997ல் டொரான்டோவினைச் சேர்ந்த இரு இயற்பியல் விஞ்ஞானிகள் பூமியின் தட்பவெப்ப நிலையானது, பூமியின் வடிவத்துடன் சேர்ந்து பிற கிரகங்களின் அதுவும் முக்கியமாக ஈர்ப்புவிசையினால் சனியாலும், குருவாலும், பாதிக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார்கள். இருவரும் நாங்கள் தான் இந்த விசயத்தை முதன் முதலாகச் சொல்கிறோம் என மார்தட்டிக் கொண்டார்கள். அதுவும் விசயம் வெளி வந்த இதழ் நேச்சர் எனும் இதழ். சாதாரணமாக எதையும் இந்த நேச்சர் இதழில் அத்தனை எளிதாக வெளியிடமாட்டார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளனின் கனவும் இந்த இதழில் வெளியிடுவதுதான். இன்னும் அந்த நிலைக்கு எல்லாம் நான் போகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது. ஒருநாளேனும் அந்த இதழில் நிச்சயம் வெளியிட்டுவிடலாம் என நம்பிக்கையும் இருக்கிறது.

பூமியின் சாய்வுத் தன்மையும் அது சுற்றி வரும் தன்மையும் பூமியில் தட்ப வெப்ப நிலை மாற காரணமாக இருக்கிறது. சாய்வுத் தன்மையானது 46000 வருடத்திற்கு ஒருமுறை மாறும் எனவும், சுற்றும் தன்மையானது 26000 வருடத்திற்கு ஒரு முறை மாறும் எனவும் கணித்து இருக்கிறார்கள். இப்படி மாறுவதால் சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்கிறார்கள்.

20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியானது சனி மற்றும் குருவின் ஈர்ப்புத் தன்மை போலவே தனது ஈர்ப்புத் தன்மையை வைத்துக் கொண்டதால் சாய்வு தனமையும் வடிவமும் பெற்றதாக ஆராய்ச்சியில் நிரூபித்து இருக்கிறர்கள். அதன் விளைவாகவே 20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் சீதோஷ்ண நிலை மாறி இருக்கக் கூடும், எனவே இனி வரும் காலங்களிலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம்

2 comments:

கோவி.கண்ணன் said...

ஐயா கட்டுரையில் அறிவியல் தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி !

//ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம் //

இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். சனிஸ்வரனுக்கும், குருவுக்கும் விளக்கு போட்டால், அல்லது ஈடு(பரிகாரம்) செய்தால் மாறும் என்பது பொய்(த்துப் போகிறது) தானே ?

Radhakrishnan said...

கோவி.கண்ணன் said...
ஐயா கட்டுரையில் அறிவியல் தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி !

//ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம் //

''இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். சனிஸ்வரனுக்கும், குருவுக்கும் விளக்கு போட்டால், அல்லது ஈடு(பரிகாரம்) செய்தால் மாறும் என்பது பொய்(த்துப் போகிறது) தானே ?''

நம்பிக்கையாளர்களுக்கு மெய்யாகவும், நம்பிக்கையற்றவர்களுக்கு பொய்யாகவும், நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விளக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மெய்யாகத்தான் இருக்கும் என்றே கருதுகிறேன் ஐயா.

என்னைப் பொருத்தவரை மனிதர்கள் தங்களுடைய சுகசேமத்திற்காகச் செய்யும் செயல்களை கேள்விக்குறியுடன் பார்ப்பதை அறவேத் தவிர்த்துவிடுகிறார்கள். கேள்வி எழுந்தாலும் அந்த நம்பிக்கைகளிலிருந்து வெளிவர அத்தனை எளிதாக முடிவதில்லை!மாற்றங்கள் நிகழ காலங்கள் விரயமாகின்றன, மாற்றங்கள் நிகழாமலேப் போகின்றன.

மிக்க நன்றி ஐயா.